Tuesday, November 5, 2013

அம்மா .....

அம்மா .....
ஒரு கோழி தன் குஞ்சுகளை பொரிப்பதற்காக‌ ஜந்து முட்டை இட்டு அடைகாத்து வாழ்ந்து வந்தது...
அது அதன் குறிப்பிட்ட‌ காலத்தில் தன் குஞ்சுகளை பொரித்தது.... இந்த‌ ஜந்து குஞ்சுகளும்  ஒரே மாதியாக‌ இல்லை நான்கு அம்மாவைப் போலவும் ஒன்று எதற்கும் கிழ்படியாமலும் இருத்தது.......

நான்கும் அம்மாவின் சிறகுகளில் இருக்க ஒன்று மட்டும் தனியாக‌ இருத்தது ..
ஆனாலும் அம்மா அந்த‌ பிள்ளையை தேடிப் போய் ஒவ்வோரு முறையும் பாதுகாத்தது....


திடீர் என்று அவர்கள் வசிக்கும் அந்த‌ ஊரில் ஒரு எரிமலை ஒன்று வெடிக்க‌ போகிறது என்று ஊர் மக்கள் அந்த‌ இடத்தை விட்டு வெளியேறினார்கள் .. உடனே அந்த‌ தாய் கோழி தன் குஞ்சுகளை பாதுக்காப்பு மிக்க‌ இடத்திற்கு கொண்டு சென்றது நான்கும் பாதுக்காப்பு இடதிற்கு கொண்டு போக‌ தன் பெற்ற ஒன்றை மட்டும் விட்டு செல்ல மனம் இல்லை .. எவ்வளவோ எடுத்து சொல்ல‌ அது தன் அம்மாவின் பேச்சை மறுத்து சுற்றிக்கொண்டு இருத்தது........

உடனே அம்மா தன் நான்கு குஞ்சுகளை பர்த்து நீங்கள் வளர்த்து விட்டீர்கள் தங்களை தாங்கள் இனி உங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் ...
நான் அந்த‌ குழந்தைக்கு வாழ்க்கையின் நிஜத்தை புரிய‌ வைக்க‌ போகிறேன் என்று சொல்லி விடை பெற்றது... அவமானம் படுத்திக் கொண்டே இருத்த‌ தன் குழந்தையை  இழுத்து தன் சிறகுகளால் முடிக்கொண்டது ... எரிமலை வெடித்து எல்லோரும் இறக்க‌ ...

இந்த தாய் கோழியும் இறத்து போனது.. அதன் கூடுகளின் அடியில் தன் குஞ்சு குழந்தை உயிரோடு  இருத்தது ... தன் அம்மாவின் பினத்தை பார்த்த பிறகு தான் செய்த‌ தவறை எண்ணி வருத்தியது ...

நீதி:  இந்த‌ உலகத்தில் தன்னை கொடுத்து நாமக்காக வாழும் ஜிவன் அம்மா .. என்பதை உணராமால் இருக்க‌ கூடாது ... யாரகிலும் ஒருவர் நமக்கு அறிவரை சொன்னால் கண்டிப்பாக‌ கேட்க முயற்சி செய்ய‌ வேண்டும்.. இருக்கும் பொழுது பாதுக்காக்காத‌ எதுவும் இல்லாத‌ பொழுது வருத்தங்களைத் தரும் .. பொருளாக‌ இருத்தாலும் சரி உயிராக‌ இருத்தாலும் சரி...

0 comments: