This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, September 16, 2014

எறும்பு!!!

செத்துப்போன பட்டாம்பூச்சியை 
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும் 
கவலையில்லை,விருந்தை சுவைக்க போகும் கர்வமும் இருப்பதில்லை!!!

Monday, September 15, 2014

கிளி!!!

சீட்டெடுத்து பழகிய கிளி 
மறந்தே போனது 
பழம்கொத்த!!!

Sunday, September 7, 2014

நாணயம்!!!

உன்னால் மட்டும்

செலவழிக்க முடிந்த

நாணயம் நான்!!!

Saturday, September 6, 2014

புன்னகை!!!

பிரியமுடன்

மகிழ்ச்சியை வாங்கி

புன்னகையை

அலங்கரித்துக் கொள்!!!

மரம்!!!


மரங்கள் பற்றியும் 
மழை பற்றியும் 
பேச,எழுத நேரமிருக்கும் 
நமக்குத் தான்,
நடுவதற்கும் 
நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை!!!

மழை!!!


மழையில் நனைந்தது மரம்

தலை துவட்டியது காற்று!!!

Sunday, January 19, 2014

"பெத்த மகனிடம் பேசுவதற்கு".....!!!!!!

அந்த தாய்
நாள் கணக்கில்
காத்திருக்கிறாள்....
பட்டுப்போன கண்ணால் ..
எட்டி எட்டி பார்க்கிறாள் ..
காசுதருவார்களா ..?
உதவி செய்வார்களா ..?
என்றல்ல ....!
"பெத்த மகனிடம்
பேசுவதற்கு".....!!!!!!

பெண்டிற்கழகு

உண்டி சுருங்குதல் ...
பெண்டிற்கழகு - என்றார்
என் மூதாதைப்பாட்டி ...!
உண்டி சுருங்குதல் ..
உலகுக்கே அழகு -என்கிறேன் நான்
உணவுப்பொருளின் விலையேற்றத்துக்கு ...
உண்டி சுருக்காமையே காரணம் ..
உற்பத்தி குறைவல்ல

ஞானியை கண்டேன் ...

ஞானியை கண்டேன் ...
கேள்வியை கேட்டேன்....
கலியுகம் என்றால் என்ன ...?
யோகத்தை மறந்து ..
மோகத்தை ...
போகத்தை ...
விரும்புவது -என்றார் ..!
விளங்கவில்லை என்றேன்..
சொல்லுகிறேன் கேள் ..!
காதல் கவிதை ..
சமுதாயக்கவிதை ..
வாழ்க்கை கவிதை ...
ஆன்மீகக்கவிதை...
என்றெல்லாம் எழுதுகிறாய் ...
ஆன்மீகக்கவிதையை ரசிப்பவர்.... ?
மிக மிக அரிதல்லவா ,....?
யோகத்தை மறந்து விடார்களே ..!
கலியுகத்தில் கடவுளை சிறிது நம்பினால் ...
கடலளவு பலன் உண்டு ...
பார்த்துக்கொண்டிருந்தேன் ...
ஞானியை காணவில்லை ...!

கூனல் நிமிர்ந்தது ...

கூனல் நிமிர்ந்தது ...
மனிதனானான் ...
கூனிக்கொண்டே...
போகிறான் ..
கூலியானான்...
கூக்குரல் இட்டு ..
தோன்றியதினம் ...
கூத்தாடிகளின் தினமல்ல ...
கூட்டத்தோடு குரல் கொடுத்தால் ...
கூட்டாக பயனைப்பெருவோம் நாம் ...

திரும்பிப்பார்க்கிறேன் ....

திரும்பிப்பார்க்கிறேன் ....
முப்பது வருடங்க்களின் ...
புள்ளிப்புள்ளியாய் நிறைய ..
சின்ன சின்ன நினைவுகள் ...
பாடசாலை இடைவேளையில் ..
பக்கத்து வீட்டு மாமரம் ...
படாத பாடு படும் ...
பூ பிஞ்சு காய் என்று பாராமல் ..
எல்லாம் கீழே விழும் ...
மாமரத்துக்கு வாயிருந்தால் ..
கண்டபடி பேசியிருக்கும் ...
எம்மைக் கண்டால்...
அணில்களும் சாபமிடும் ..
அதுகளின் உணவிலும் ...
கைவைத்தவர்கள் நாங்கள் ....
உச்சியில் ஒருகாய் இலைக்குள் ..
மறைந்திருக்கும் ....
சாவால்விட்டு.விழுத்துவோம் அதனை ..
எத்தனைநாள் எத்தனை ஓடுகள் உடைப்பு ..
அத்தனையும் வாட்டுகிறது இப்போ ...!!!

தனியார் மருத்துவமனை அவலம் !!!!

கண்டுபிடித்துத் தாருங்கள்!
கருவறையில்
காணாமல் போன‌
என் மகனை-தனியார் மருத்துவமனை அவலம் !!!!

என் வாழ்க்கை

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள்
எங்களையார் கேட்பார்கள்
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது
வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

நான் ( ஆணவம் )....

குழந்தை அழுதால் பசி
குயில் அழுதால் தேடல்
குடல் அழுதால் பட்டினி
உடல் அழுதால் நோய்
விதை அழுதால் விரயம்
வீரம் அழுதால் தோல்வி
மானம் அழுதால் இழப்பு
தானம் அழுதால் வறுமை
மனம் அழுதால் மன்னிப்பு
சினம் அழுதால் சீர்திருத்தம்
நீ அழுதால் அது நட்பு
'நான்' அழுதால் அது ஞானம்
குறிப்பு ;நான் ( ஆணவம் )....

நிழல் இருட்டில் மட்டும்!!!

இத்தனை நேரம்
என்னைத் தொடர்ந்த
நிழல்
இருட்டில் மட்டும்
எங்கே போனது?
இருட்டில் எங்கோ
ஒளிந்து கொண்டு
வெளிச்சத்தில் நிழலின்
வேலை என்ன ?
பட்டப் பகலில்
பயணத் துணை
யார் கேட்டது?
இத்தனை நேரம்
என்னைத் தொடர்ந்த நிழல்
இருட்டில் மட்டும்
எங்கே போனது?
வெளிச்சத்தில் சேவையும் ..
இருட்டில் விடுமுறையும் ...
எடுக்க நீ என்ன அலுவலக ..
உத்தியோகத்தரா ...???
என்னோடு இருந்து ..
எனக்கே இடையிடையில் ..
கழுத்தறுக்கும் நீ ...
எப்படி என் நிழல் என்பேன் ..??
ஓ அதற்காக தான் நீ ...
முகம் காட்டாமல் ..
இருளாய் இருக்கிறாயா ...???

தாயின் !!!

தாயின் கருவில் இருக்கும் 
குழந்தையின் குரல் சன்னமாய் 
கேட்கிறதே ! சற்று உற்றுத்தான் 
கேட்டுப்பார் மானிடனே !
உலகத்திற்கு  வந்துவிட்டால் 
எனக்கு இல்லை பாதுகாப்பு 
என்றே புலம்பி தவிக்கிறது 
சாத்திக்கப் பிறப்பாய் என்றே 
தவம் இருக்கிறாள் தாய் 
சாதிக்காக  தலை சரிக்க 
துடிக்கின்ற சாத்தான்களை 
எண்ணி அஞ்சுகிறதாம் பிஞ்சு 
தாலாட்ட அன்னை இருக்க 
ஆளாக்க தந்தை இருக்க 
அரவணைக்க உறவு இருக்க 
கூடி மகிழ நட்பு இருக்க 
வாழ்வை ரசிக்க காதல் இருக்க 
சுமந்த தாயின் கனவுகளை 
வண்ணமாக்க ஆயத்தமாய் 
ஆனந்தமாய் வரத்துடிக்கிறேன் 
அத்தனையும் விஷக்கிருமிகள் 
ஊடுருவி நாசமாகிப்போச்சே 
ஊழல் இல்லா உலகமிதுன்னு 
உத்திரவாதம் யார் தருவார் ?
இந்த புயலுக்கும் சூரவளிக்கும்
கருவிலேயே கதி கலங்கி  
நல்ல செய்தி வரும் வரை 
இந்த பிறப்பை தடை செய்ய 
இறைவனிடம்  இறைஞ்சுகிறோம்
இருட்டறையில் ஈனக்குரல் 
இரக்கம் கொள் மானிடா 
காயத்தை கண்ணீரை மாற்றிவிடு

வாழ்கையில் எல்லாமே!!

வாழ்கையில் எல்லாமே மனிதனுக்கு ஏக்கம் தான்!!
சிலர் பசிக்காக வாழ்கிறான்,
சிலரோ ருசிக்காக!!!!!

எல்லாமே ஏக்கம் தான் ....!!!

மழைக்காக ஏங்குகிறது
விவசாயம் ....!!!
மின்சாரத்துக்காக ஏங்குகிறது
தொழிற்சாலை ...!!!
பேரூந்தின் வரவுக்காக ஏங்குகிறது
பயணியின் மனம் ....!!!
மகனின் கடிதத்துக்காக ஏங்குகிறது
தாயின் மனம் ....!!!
அப்பாவின் பொம்மைகாக ஏங்குகிறது
குழந்தையின் மனம் ...!!!
காதலுக்காக ஏங்குகிறது
இளவயது மனம் ....!!!

மாற்றம் வேண்டுமாம்?

எவர் சில்வர் வந்தது ...!!!
பானை அழுதது ....?
பானையின் குடும்பம்
மண்குழிக்குள் ...!!!
மாருதி வந்தது
மாட்டுவண்டி அழுதது ...?
மாட்டு வண்டி குடும்பம்
மாண்டு போனது ....!!!
தகவல் தொழில் நுட்பம் வந்தது
தந்தி இறந்தது ...!!!
மாற்றங்கள் வேண்டும்
நிச்சயம் வேண்டும் ..
மாண்டு போகாத
சமுதாயத்துடனும்
இறந்து போகாத நம்
கலாச்சாரத்துடனும் ....!!!

உயிரின் பாசம் !!!

இங்கு இருக்கும்,
 மனிதத்திற்கு,
 தெரியாமல்,
ஒவ்வொரு,
இடமாக செல்கிறேன்.
அடைபட்டு,
 இருக்கும்,
பறவைகளையும்,விலங்குளையும்.
சுதந்திரம்,
கொடுக்க,
 அந்த உயிரினங்கள்,
 என்றெனும்,
நினைத்து பார்க்கும்,
 சுதந்திரம்,
கொடுத்த,
 என்னை,
 அவைகள்,
மனிதம் அல்ல,
மறந்து போவதற்கு!!!!!!!!!

மாயன் சொன்னதுபோல்

மாயன் சொன்னதுபோல்
உலகம் அழிந்திருந்தால்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நீ கட்டிய நட்சத்திர வீட்டில் -நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்..!
ஏ இதயனே இது மெய்தானா?
ஏ கண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருக்கும் என்பதற்காக நான்
பாயாக இப்போது கூட இருப்பதை நடக்கிறது
உனக்கு தெரியாமல் ....!
உயிரே நான் உன்னை உயிராகவே
நினைக்கிறேன்.....!

காதல் மொழியிருக்கும் வரை !!!

கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....
மறவாமல் வாழுவேன்
உன் நினைவுகளோடும்
என் காதலோடும்.
நீ கற்றுத்தந்த மொழியால்
கற்றேன்
உன்னோடு காதலில்
விழுந்த என் இதயத்துக்கு
கவிதை எழுத
கற்று தந்தது
உன் இனிமையான காதல் மொழிகள் .
காதல் மொழியிருக்கும் வரை நம்
காதலும் இருக்கும் ....
கலங்காதே
மறந்து விடுவேனோ
என்றெண்ணாதே ....

நன்றியுடன் ;மறைந்த என் தந்தைக்காக....!

சிறுவயதில்
நடைபழக்கிய தந்தையே ..
பட்டகடனை திருப்பி
செலுத்துவதுதானே
பிள்ளை செலுத்த வேண்டிய பணி ..
இப்போ நீங்கள் ஊர் சுற்றிப்பார்க்க
நான் உங்களுடன் நடக்கிறேன்
மெது மெதுவாக ...!
நன்றியுடன் ;மறைந்த என் தந்தைக்காக....!

ஒரு கல்லூரி கதை

வாழ்க்கையில் பல ஆண்டுகள்
பள்ளிப்பருவகாலம் .....
புள்ளி மான்கள் துல்லித்துரியும்
பள்ளிப்பருவகாலத்தில் ....
முடிந்தபின் புள்ளிமானின்
புள்ளிகளைப்பார்த்தால் ....
பல புள்ளிகளில் ......
ஒருதலைக்காதல் ......
ஒழிந்திருக்கும் ....
கல்லூரி(பல்கழைக்கழகம் ) மாணவர்களே ....
நன்றாக சிறகடித்து கொள்ளுங்கள்
இந்த கல்லூரி காலம் .....
சில ஆண்டு மட்டும் தான்....
முடிந்த பின் ஒடிந்த ஒவ்வொரு
சிறகையும் எடுத்து பாருங்கள்
ஒவ்வொரு சிறகிலும்
ஒரு கல்லூரி கதை
எழுத பட்டிருக்கும்......

உண்மைக்காதல் ....!

காதல் மழை எல்லோர் மீதும் ..
பொழிகிறது ....
வெளியே போனால் சுரம்
பிடிக்கும் என்று இருந்தால்
ஒருதலைக்காதல்.....!
முழுக்க நனைந்தால் ...
காமக்காதல்...!
மழையை பொருட்படுத்தாமல்...
நனைந்து சென்றால்...
உண்மைக்காதல் ....!

முடியவில்லை ...

காற்றை நேசித்தேன் ...
உணர முடிந்தது ...
பார்க்க முடியவில்லை ...
கடலை நேசித்தேன் ...
பார்க்கமுடிந்தது ...
கடக்க முடியவில்லை ...
கடவுளை நேசித்தேன் ...
நம்பிக்கை வந்தது
நிரூபிக்க முடியவில்லை
உன்னை நேசித்தேன் ..
நினைவுகள் வந்ததால் ..
மறக்கமுடியவில்லை .....!

நானும் ஓர் அகதி தான்...

வானத்தில் அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்
வனத்தில் காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்
பூக்கள் வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்
என் காதல் தேசத்தில்
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...

ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

நான் திரிந்த பாதை ...
 நான் ரசித்த பாதை ...
 அழகான இருபுறமும் ...
 அடர்ந்த மரங்கள் ...
 கணவன் மனைவிபோல் ...
 உயரமான குட்டையான அருகருகே ..
 மரங்கள் ..காற்றடித்தால் ஒன்றை ஒன்று ..

உரசும் ஊடல் ...!!!

தரையில் வண்ண வண்ண பூச்சிகள் ..
 இசைக்கச்சேரி நடார்த்தும் குருவிகள் ...
 சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அழகை ..

இப்போ ....!!!

இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் ...
 ஒரே நிறத்தில் அசையாத பிணம்போல் ...
 ரசிக்க என்ன இருக்கிறது என் ஊரில் ....???

சுதந்திரத்தை பற்றி ...

சுதந்திரத்தை பற்றி ...
 கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் ...
 முற்றத்தில் வந்து விழுந்த்தது ...
 காகங்களால் கொத்தப்பட்ட ...
 குருவியொன்று ....!!!

எடுத்த குருவியை ...
 மெதுவாக வருடி ...
 முடிந்தளவு பாதுகாத்து ...
 பறக்கவிட ஆயத்தப்படுத்தினேன் ...
 வேண்டாமப்பா ..நிறுத்துங்க ..
 அதை கூட்டில் வளர்ப்போம் ..
 தடுத்தான் செல்ல மகன் ...!!!

வேண்டாம் மகனே ...
 அதன் சுதந்திரத்தை பறிக்க கூடாது ..
 பறக்க விட்டேன் குருவியை ..!!!

வாடா மகனே ....
 வெளியில் நிற்காதே ...
 பொல்லாத உலகமடா இது ...
 கூறியபடி மகனை அடைத்தேன் வீட்டுக்குள் ..!!!

சுவரில் கிறுக்காதே ....

சுவரில் கிறுக்காதே ....
 விளையாடும் குழந்தைகளின் ...
 தாயின்- தடித்த வார்த்தை ..!!!

கிறுக்கட்டும் விட்டுவிடு .....
 தந்தையின் -கனிவு வார்த்தை ...!!!

பல ஆயிரம் கொடுத்து ...
 வர்ணம்பூசிய சுவர் -அவளின் ...
 ஏக்கவார்த்தை...!!!

உனக்கு தெரியுமா ....???
 இன்று நவீன சித்திரம் என்று ...
 கிறுக்கியதுதான் பலகோடி ரூபா ...

யார் கண்டது கண்ணே ...
 எதிர்காலத்தில் நவீன ஓவியன் ...
 நம்வீட்டில்.....???
 நம்பிக்கை வார்த்தை ...!!!