This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, December 15, 2013

அடையாளம்

அடையாளம்
************************
ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.
அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.
அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.
பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!

உதாசீனம்

உதாசீனம்
*****************
ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான்.பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த் உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள்.அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான்.யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள்.அவன் மனைவியிடம் சொன்னான்,''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்கசரியானஇடம்,''என்றான்.
மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே?அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள்.''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.

எனது இலைகள் எங்கே போயின ...?

எனது
இலைகள் எங்கே போயின ...?
எனது
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன
மரத்தின் ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல்
மனமுடைந்து
நிற்கிறது பட்ட மரம் நான் ....!!!
காதலுடன்
என் கிளையில் கொஞ்சி
குழாவிய இளம் பறவைகளின்
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை
இழந்தேன் .........!!!
வாட்டும் வெயிலில்
நடை தளர்ந்து வரும் போது
நிழலுக்காக வந்து பேசும்
மனிதர்களின் இன்பபேச்சை
கேட்பதை இழந்தேன் .....!!!
ஊஞ்சலலாடி விளையாடும்
சின்ன சின்ன முத்துக்களின்
செல்லமான சண்டையையும்
ஓலமிட்டு அழும் சத்தத்தையும்
கேட்பதையும் இழந்தேன் ....!!!
காதலர்கள் மரத்தடியில்
ஊடல் செய்து உறவாடும்
அழகை என் கள்ள கண்ணால்
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!
பட்டுப்போன
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும்
அரித்துக்கொண்டிருக்க
போதாததற்கு குறைக்கு
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில்
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!
அதோ
வருகிறது என் பாசக்கயிறு
கோடரி என்ற சாவுகாவி
ஏய் கோடரியே -கவனி
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும்
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே
பயன்படுத்துகிறாய் .....!!!
(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம்
வளர்ப்போம் )

#paypetechnologies
#rameshmuthuvel

வாதத் திறமை

வாதத் திறமை
***********************
ஒரு பிரபலமான வக்கீல்,வாதத் திறமை மிக்கவர்.அவர் ஒரு பெரும் பணக்காரருக்காக ஒரு கேசில் ஆஜரானார்.இந்த வக்கீல் பெரும் குடிகாரர்.பணக்காரரின் கேஸ் கோர்ட்டில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது.அன்று வக்கீல் தன் வாதத் திறமையைக் காட்ட வேண்டிய நாள்.
ஆனால் முந்திய இரவு மிக அதிகமாகக் குடித்திருந்ததால் கோர்ட்டிற்கு தள்ளாடிக் கொண்டே வந்தார்.குடி வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல்,வாதத்தின்போது அவர் பணக்காரருக்கு எதிரான வலுவான வாதங்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.
பணக்காரர் அழ ஆரம்பித்துவிட்டார்.வக்கீலின் உதவியாளர்கள் சைகைகள் மூலம் எவ்வளவோ சொல்லியும் வக்கீல் கண்டுகொள்ளவில்லை.மதிய உணவு இடைவேளை வந்தது.பணக்காரரும் வக்கீலின் உதவியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.
அவருக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுவந்தது.நடந்த தவறைப் புரிந்து கொண்ட அவர்,பணக்காரரிடம் ஒன்றும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.கோர்ட் மீண்டும் கூடியது.வக்கீல்வாதாட ஆரம்பித்தார்,''கணம் கோர்ட்டார் அவர்களே,காலையில் நான் உங்கள் முன் வைத்த விவாதங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் உங்கள் முன் வைக்கக்கூடிய வாதங்களாகும்.
இப்போது நான் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும்.''என்றுகூறிவிட்டு ஆனித்தரமாக பணக்காரருக்கு சாதகமாக, காலையில் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.அவர் வாதம் முடிந்தவுடன் நீதிபதி,எதிர்த்தரப்பு வக்கீலை அழைத்தார்.
அவரோ,'நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அவரே சொல்லி பதிலும் சொல்லிவிட்டார்.இதில் நான் பேசே என்ன இருக்கிறது?'என்று கூறி அமர்ந்துவிட்டார்.கேஸ் பணக்காரருக்கு சாதகமாக முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

எல்லாம் ஒன்றுதான்.

எல்லாம் ஒன்றுதான்.
*******************************
ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.
அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.
ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.மறுநாள் கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.
அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,''நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.''என்றான்.
ஒரு பொருளை உபயோகிக்காவிடில் அது இருந்தாலும் ஒன்றுதான்;இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

Saturday, December 14, 2013

எனக்கு காதல் அகராதி தான் ...!!!

நீ கோபத்தோடு பேசும்
பேச்சுக்கள் கூட எனக்கு
கவிதை வரிகள் தான் ...!!!
நீ எழுத்து பிழையாக
எழுதிய கடிதங்கள் கூட
எனக்கு காதல் அகராதி தான் ...!!!
****************************
உன்னை பற்றி
நினைக்கையில்
தானாய் வந்து விடுகிறது
வரிகளும் கவிதையும்
உன்னை பார்க்கும் போது
வரமறுக்கிறது
வரிகளும் கவிதையும்
****************************
நீ என்னை விட்டு விலகி
விட்டாய் ....?
எப்போதோ நீ
பரிசளித்த,
நினைவு பரிசில் புதைந்து
கிடக்கிறது,
நம் ஆரம்ப காதல் ...!!!
****************************
உன் வீட்டுக்கு வந்த போது
எனக்கு வைத்த லட்டில்
நீ கடித்து வைத்த லட்டை
நான் எடுத்து சாப்பிட்ட போது
தூரத்தில் நின்று துள்ளி
குதித்த நிகழ்வை
எப்படி மறப்பேன் அன்பே ....!!!
************************************
ஒவ்வொரு செல்ல சண்டைக்கு
பின்னரும் நீ ஒரு கள்ள சிரிப்பு
சிரிப்பாயே -அந்த சிரிப்பில்
புதைந்துள்ளது காதலின்
சொர்க்கம் ....!!!
_________________
***********************************
மனம் மாறுவதுதான்
காதல் அல்ல .....!!!
உள பயிற்சியும் காதல்
தான் .....!!!
நீ என்னை மாற்றினாய்
நான் உன்னை மாற்றினேன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் தான்
காதல் .....!!!

காதல் எரிகிறது ....!!!

என்னை கண்டதும்
முகம் திருப்புகிறாய்
காதலை
வெறுக்கிறாயா ..?
ஏற்கிறாயா ....?
நம் காதலில் ஏதோ
ஒரு வலி தெரிகிறது
உன் இதயம் என்னை
பார்த்து ஏளனமாய்
சிரிக்கிறது.....!!!
உன் கண்ணீர் நெய்
என் நினைவு திரி
காதல் எரிகிறது ....!!!

எதற்கு ஆசைப்படுகிறாய் மனிதா ...?

எதற்கு ஆசைப்படுகிறாய் மனிதா ...?
ரசித்து ரசித்து கட்டிய வீட்டுக்கா ...?
உழைத்து உழைத்து வாங்கிய வயலுக்கா ..?
பதுக்கி பதுக்கி சேமிக்கும் பணத்துக்கா ...?
சிற்றின்பம் தரும் சிறுக்கிகளுக்காகவா..?
அழகு படுத்தி அலங்காரப்படுத்தி ...
வண்ன வண்ண உடையுடுத்து ..
நேரம் தவறாமல் உண்ட உடல்
வேகுமடா ஒரு கொள்ளி நெருப்பில் ...
கொள்ளி வைத்து உன்னை எரித்ததால்
கொள்ளி வால் பேய் என்று உன்னை
ஊரே ஒதுக்கி வைக்கும் ....!!!
இறந்த பின்னரும் இருக்க விடாது
மூடர்கள் கூட்டம் ....!!!
யாருக்கு சேர்க்கிறாய் சொத்து ...?
எதை கொண்டுபோகிறார் உன்னுடன் ..?
உன் ஒரு பிடி சாம்பலையும் ...
ஓடும் தண்ணீரில் கரைத்து விடும்
சமூகம் - ஒருசில ஆண்டுகள்
திதி செய்வர் மேலும் சில ஆண்டுகள்
மாலையம் செய்வர் -அடங்கிவிடும்
உன் அனைத்து பெயரும் ...!!!
வாழும்
காலத்தில் அளவோடு ஆசைப்படு
தேடும்
இன்பங்களை நிதானத்துடன் அனுபவி
இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும்
மனிதர்களும் இல்லாமல் இல்லை
இந்த பூவுலகில் ......!!!

இமை கொண்டு மூடுகிறது ...!!!

உன்னை கண்டவுடன்
என் இதயம் சிரிக்கிறது
கண் தண்ணீரை தருகிறது
காதல் இதயம் உள்ளவருக்கு
வரும் அற்புத கலை
உனக்கேன் வந்தது ....!!!
நீ வீட்டில் இருந்து
வரும் போது காத்திருந்த
என் கண்கள் -இப்போ
இமை கொண்டு மூடுகிறது ...!!!

கண்டவுடன் இதயம் சுரண்டுது ...!!!

நீ காதலில்
இரவா ..? பகலா ...?
நான் சிரித்தால்-நீ
முறைக்கிறாய்
நான் முறைத்தால்
நீ - கை
கொட்டி சிரிக்கிறாய்....!!!
உன் காதல் கடல்
வறண்டு விட்டது
நான் காதல் மீன்
பிடிக்கவருகிறேன்....!!!
உன்னை பார்க்கமாட்டேன்
என்று கண்ணிக்கு சொன்னேன்
உன்னை
கண்டவுடன் இதயம் சுரண்டுது ...!!!

தாயன்பு

தாயன்பு
**************
தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை.திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன்.நீ வருகிறாயா,இல்லையா?''என்று சப்தம் போட்டு சொன்னாள்.அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.தாயன்பு தானே அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.

தெரியாதது

தெரியாதது
************
சாது ஒருவர் புத்தரைப் பார்க்க வந்தார்.அவர் புத்தரைப் பார்த்து,''உங்களைப் போல ஒரு புத்தரை நான் பார்த்ததில்லை.உங்களைப்போல அறிவிலும் ஞானத்திலும் சிறந்த வேறொருவர் உலகில் இல்லை.''என்று புகழ்ந்தார்.புத்தர் புன்முறுவலுடன்,''நீங்கள் எத்தனை புத்தரைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள்?அவர்கள் என்னளவிற்கு இல்லை என்றீர்கள்.அவர்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள்?.''என்று கேட்டார்..சாதுவோ இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை.பதில் சொல்ல இயலாமல் தயங்கினார்.புத்தர் சிரித்துக் கொண்டே,''பரவாயில்லை,உங்களுக்குத்தான் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று சொன்னீர்கள் அல்லவா?என்னைப்பற்றியாவது சொல்லுங்கள்.நான் எப்படி வாழ்கிறேன்?''என்று கேட்டார்.அதற்கும் பதில் சொல்லத்தெரியாது அந்த சாது அமைதி காத்தார்.பின் அங்கிருந்து வெளியே சென்றார்.
தெரியாத விஷயத்தில் மௌனம் காப்பதுதான் சிறந்தது.

அண்ணலின் அன்பு

அண்ணலின் அன்பு
****************
ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் தன நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு வயதான பெண்மணி அண்ணலைப் பார்க்க வெகு தூரத்திலிருந்து வந்திருந்தார்.அண்ணலை தரிசித்தபின் தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் அன்போடு கொடுத்தார் அந்த மூதாட்டி.அண்ணலும் சிரித்துக் கொண்டு அந்த மூதாட்டி முன்னிலையிலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.அவர் சென்றபின் நண்பர்கள் கேட்டனர்,''வழக்கமாக யார் எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடுவீர்களே?இன்று என்ன பழம் மிக ருசியாக இருந்ததோ?நீங்களே முழுவதும் சாப்பிட்டுவிட்டீர்களே?''அண்ணல் சொன்னார்,''அந்தப் பெண்மணி கொடுத்த பழம் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகப் புளிப்பாக இருந்தது.உங்களிடம் கொடுத்தால் மிகப் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது சொல்லி விடுவீர்கள்.உடனே அந்த மூதாட்டியின் மனம் மிகவும் புண்படும்.அதனால் சிரித்துக் கொண்டே நான் முழுவதையும் சாப்பிட்டேன் அந்த மூதாட்டி முகத்திலே எவ்வளவு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்?''

திருப்தியற்ற மனம்

திருப்தியற்ற மனம்
****************
இளம் பெண்மணி ஒருத்தி தன குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள்.கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு அலை திடீரென இழுத்துச் சென்று விட்டது.''ஐயையோ,என் குழந்தை போய்விட்டதே,''என்று அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதாள்.அந்தப் பண்ணின் அழுகை உருக்கமானதாக இருந்ததால்,கடல் தெய்வம் குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது.தன குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு மகிழ்ச்சியில் அவள் திக்குமுக்காடி விட்டாள்.குழந்தையின் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டவள்,எதேச்சையாகக் குழந்தையின் காலைக் கவனித்தாள்.குழந்தையின் ஒரு காலில் தான் செருப்பிருந்தது.இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை.உடனே அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி பறந்து விட்டது.''ஐயையோ,செருப்பு போய்விட்டதே,''என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
இப்படித்தான் பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாச்சாரங்கள் நம் மகிழ்ச்சியைப் பறித்து விடுகின்றன.எதிலும் திருப்து அடையாதவர்களுக்கு மகிழ்ச்சி ஏது?

இரு நண்பர்கள்

இரு நண்பர்கள்
***********************
இரண்டு நண்பர்கள் ஒரு சாலையின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் ஒரு பை கிடந்தது அதை ஒருவன் எடுத்துப் பார்த்ததில் பணம் இருந்தது.மற்றவன் சொன்னான்,''நமக்கு நல்ல யோகம் இன்று எதிர் பாராத விதமாக நமக்குப் பணம் கிடைத்துள்ளது.''முதல்வன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.எனக்கு என்று சொல் நான் தானே பையை எடுத்தேன்.''சிறிது தூரம் சென்றவுடன் ஒருவன் ஒருவன் ஒரு காவலரைக் கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.அவன் தான் பையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டு,''நமக்கு பிரச்சினை வரும்போல் இருக்கிறதே,''என்றான் பையை எடுத்தவன் நண்பன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.உனக்கு என்று சொல்,''
பிறர்க்கு உதவி செய்யாதவர்கள் பிறர் உதவியை எதிர் பார்க்க முடியாது.

அம்மாஞ்சியும் அவன் நண்பரும்

அம்மாஞ்சியும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டுகடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள்.
அங்கு நிறைய மீன் கிடைத்தது. அம்மாஞ்சியின்நண்பன் சொன்னான் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். அம்மாஞ்சியும்சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் அம்மாஞ்சின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தைகிளப்பினான். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"என்றான்.
கொஞ்ச நேரம் யோசித்த அம்மாஞ்சி சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்சநேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்றே..? எனகேட்ட நண்பனுக்குஅம்மாஞ்சி பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டுவர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".

அம்மாஞ்சி

அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவுசெய்தான்.
ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல...""ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?""அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே...
""பணத்தை யாரும்எடுத்துட்டாங்கன்னா..?""பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்..""அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்றுபெருமையாக சொன்னான் அம்மாஞ்சி.#

ஒரு டாக்சீ

ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க... அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா" ன்னு சொல்லியிருக்கார்... அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்...
நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்... வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க... அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே... நான் ரொம்ப பயந்துட்டேன்..."
உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது..." அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உன் பேர்ல தப்பில்லப்பா... நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்... இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!"

கோழி பண்ணை

கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.
மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.
மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்

உணர்வு

உணர்வு
************
மகா பாரதத்தை எழுதியதோடு வேதங்களைத் தொகுத்தவர் வியாச முனிவர் அவருடைய மகன் சுகர்.பிரம்ம ஞானி.ஆடைகளையே சுமை என்று கருதி அவற்றைத் தவிர்த்தவர்.ஒரு நாள் அவர் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தார்.ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.இதைக் கவனித்த வியாசர் தன மகன் உடையின்றி செல்வதால் இளம் பெண்கள் சங்கடப் படுவார்களே என்று எண்ணி மகனை வேறு பாதைக்குத் திருப்ப விரைந்து சென்றார்.ஆனால் சுகர் பெண்களைக் கடந்து செல்லும்போது பெண்கள் பகுதியில் எந்த வித சலசலப்பும் இல்லை.ஆனால் வியாசர் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பெண்கள் சட்டென்று உடைகளை இழுத்துப் போர்த்துக் கொண்டு நின்றனர்.வியாசருக்கு ஆச்சரியம்.தன மகன் உடையில்லாமல் போவதைப் பொருட்படுத்தாத பெண்கள் தான் முனிவர் என்பது தெரிந்தும் பெண்களிடையே ஒரு பதற்றம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.அப்பெண்களிடம் அவர் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள்,''தங்கள் மகனைப் பார்க்கும்போது அவர் மனதில் தான் ஒரு ஆண் என்ற உணர்வு கூட இருப்பதாகத் தெரியவில்லை.எனவே எங்களுக்கு அவரைக் கண்டபோது மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.எங்களுக்கும் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு அந்நேரம் இல்லை.உங்கள் மனதில் நீங்கள் ஒரு ஆண் என்ற உணர்வு அழுத்தமாக இருக்கிறது.அதனால் எங்களுக்கும் உங்களைப் பார்த்த உடன் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு வந்து விட்டதால் எங்களுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டு நாங்கள் உடைகளை சரி செய்தோம்.''தன மகன் தன்னையே மிஞ்சி விட்டார் என்பதை வியாசர் புரிந்து கொண்டார்.

உன் பாதசுவடு என்னில் இதயத்தில் பதிகிறது

காதலி கிடைத்தது பாக்கியம் இல்லை
நீ கிடைத்தது தான் பெரும் பாக்கியம்
**********************
நீ அருகில் சென்றாலே -உன் பாதசுவடு
என்னில் இதயத்தில் பதிகிறது
**********************
என்னை புரியும் படி உன்னை - அனுப்பிய
கடவுளுக்கு நன்றி
*********************
என் இதயத்துடிப்பு அதிகரித்தத்தற்கு
காரணமான அவளை கைது செய்யுங்கள
*********************
சூரியனும் நீயும் ஒன்றுதான் இருந்தால் இன்பம்
மறைந்தால் மௌனம் ...!!!

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை
***********************************
அவள் மௌனம்தான் மௌன அஞ்சலியாக்கியது
*********************************
நியத்திலும் கனவிலும் வராமல் மரணத்தில் வா.
**********************************
உன்னை கண்டேன் என்னை திண்டேன்
***********************************
நான் விடுவது கண்ணீர் அல்ல காதலின் பெறுபேறு

பத்தும் பலதாய் வரும்

இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
---தென்னை --
*********************
பத்தும் பலதாய் வரும்
பத்திரமாத தங்கம்
பத்திரிக்கை -
ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--
******************
வடிந்தால் அழகு
பாய்ந்தால் பயம்
--நீர் --
*****************
பலத்தாலும் மேன்மை
குணத்தாலும் மேன்மை
--யானை --

நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம்

நண்பா கர்ணனாக இருக்கவேண்டியதில்லை
கருணையோடு இருந்தால் போதும்
**********************
நடப்பு நேரத்தில் உதவுவதால் தான் நட்பு என்கிறோம்
*********************
நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம்
************************************
தடையில்லாமல் வரும் தடுத்தாலும் வரும் -நட்பு
***********************************
இதயத்தில் இருந்தால் காதல் இதயமாக இருப்பது நட்பு

என் பாழடைந்த நெஞ்சில் நீ ஆவியாகவாது இரு

என் பாழடைந்த நெஞ்சில் நீ ஆவியாகவாது இரு
********************************
அவள் அழகில்லை ஆனால் அழவைப்பாள்
*********************************
நீ அதன் பின் பிரிந்தாய் எந்த இரவும் சிரிக்கவில்லை
******************************
என்னிடம் நீ இருக்கும் போது நான் எங்கே ...?
******************************
காதலின் வானவில் நீ பலகுணம் காட்டுகிறாய்
******************************
நீ சுடர் அழகாகவும் ஆபத்தாகவும் இருக்கிறாய்
*****************************
நீ நிழல் விலகுகிறாயுமில்லை பேசுகுறாயுமில்லை
******************************
நீ சொல்லாவிட்டால் என்ன உன் முகம் சொல்லுகிறதே என்னை பிடிக்கவில்லை என்று
******************************
காதல் கதவை திறக்கமுடியாமல் தொலைந்த சாவி நீ
*******************************
அவள் முடிக்கும் இடத்தில் நான் காதலை தொடர்கிறேன்
****************************

ஓஷோ சொல்கிறார்

ஓஷோ சொல்கிறார்
எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.
**********
பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை வெளிப்பட்டுவிடும்.
**********
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது.இங்கு எது முக்கியம் எனில்,அப்படி எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
**********
ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது.உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க முயற்சி செய்கிறீர்கள்.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ ,மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.
**********
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள்.அதை ஒரு சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும்.ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.