Saturday, December 14, 2013

எதற்கு ஆசைப்படுகிறாய் மனிதா ...?

எதற்கு ஆசைப்படுகிறாய் மனிதா ...?
ரசித்து ரசித்து கட்டிய வீட்டுக்கா ...?
உழைத்து உழைத்து வாங்கிய வயலுக்கா ..?
பதுக்கி பதுக்கி சேமிக்கும் பணத்துக்கா ...?
சிற்றின்பம் தரும் சிறுக்கிகளுக்காகவா..?
அழகு படுத்தி அலங்காரப்படுத்தி ...
வண்ன வண்ண உடையுடுத்து ..
நேரம் தவறாமல் உண்ட உடல்
வேகுமடா ஒரு கொள்ளி நெருப்பில் ...
கொள்ளி வைத்து உன்னை எரித்ததால்
கொள்ளி வால் பேய் என்று உன்னை
ஊரே ஒதுக்கி வைக்கும் ....!!!
இறந்த பின்னரும் இருக்க விடாது
மூடர்கள் கூட்டம் ....!!!
யாருக்கு சேர்க்கிறாய் சொத்து ...?
எதை கொண்டுபோகிறார் உன்னுடன் ..?
உன் ஒரு பிடி சாம்பலையும் ...
ஓடும் தண்ணீரில் கரைத்து விடும்
சமூகம் - ஒருசில ஆண்டுகள்
திதி செய்வர் மேலும் சில ஆண்டுகள்
மாலையம் செய்வர் -அடங்கிவிடும்
உன் அனைத்து பெயரும் ...!!!
வாழும்
காலத்தில் அளவோடு ஆசைப்படு
தேடும்
இன்பங்களை நிதானத்துடன் அனுபவி
இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும்
மனிதர்களும் இல்லாமல் இல்லை
இந்த பூவுலகில் ......!!!

0 comments: