பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் நாம் முதலில் அக்கறை கொள்ள வேண்டும், தீர்வு என்ன என்பதை அல்ல; அது பின்னர் வரும்.
நம்மில் பெரும்பாலோர் ஏதாவது செய்ய விரும்புகிறோம், ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு நம்மை ஈடுபடுத்த விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக அது அதிக குழப்பத்திற்கு, அதிக பிளவுக்கு வழிவகுக்கிறது.
நாம் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும்; பிரச்சினையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்ல, ஆனால் முழு வாழ்க்கையிலும் - அலுவலகத்தில், குடும்பத்தில், அன்பில், பாலியலில், முரண்பாடு, லட்சியம் மற்றும் மரணம் - எல்லாம் பிரச்சனையாக உள்ளது - இவை எல்லாவற்றையும் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆழ்ந்த பிரச்சனைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் - கடவுள் என்று ஒன்று இருக்கிறதா, உண்மை என்று ஒன்று இருக்கிறதா - நீங்கள் எந்த பெயரையம் அதற்கு கொடுக்கலாம்.
இந்த பிரச்சனைகளை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அது தான் நமக்கு சிரமமாக உள்ளது -
ஏனென்றால் ஒரு பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற நாம் மிகவும் பழக்கமாகிவிட்டோம்; எல்லா சிக்கல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை நாம் காண்பதில்லை. எனவே ஒரு முழுமையான உளவியல் புரட்சியைக் கொண்டுவருவது - பொருளாதார அல்லது சமூகப் புரட்சியை விட - மிக முக்கியமானது என்று தெரிகிறது.
ஏனென்றால் பிரச்சினைகள் மிகவும் ஆழமானவை - ஒரு குறிப்பிட்ட குழுவில் சேருவது, தியானம் செய்வது, ஒரு குகைக்குள் வாழ்வது, ஜென் அல்லது யோகா கற்றுக்கொள்வது - இவை எல்லாவற்றையும் விட ஆழமானது.
நம்மில் பெரும்பாலோர் முன்னெடுக்கப்பட்ட முடிவுகளுடன், கருத்துகளுடன், கணிப்புகளுடன் பிரச்சினைகளைப் பார்க்கிறோம். எனவே, பார்ப்பதில் சுதந்திரமில்லை; உண்மையில் உள்ளது என்ன என்பதைக் கவனிக்க நமக்கு சுதந்திரமில்லை. மனம் சுதந்திரமாக இருக்கும்போது, பிரச்சினை என்ன என்பதை ஆராய்ந்து, பின்னர் அந்த கவனிப்பிலிருந்து புரிதல் வருகிறது.
அந்த புரிதல் தான் ஆற்றல்.
அந்த கவனிப்பு தான் செயல்.
~ ஜே.கிருஷ்ணமூர்த்தி
1st Public Talk
At University Of California, Berkeley - 3rd February 1969.
"You are the World" புத்தகத்திலிருந்து (Chapter 4)
#jkrishnamurti







0 comments:
Post a Comment