Sunday, December 1, 2024

"சரி இதோ போறேன்".

இன்னும் விடியாத இரவுகள்.நேற்று அடித்த புயலில் களைத்துப் போன தெருக்கள். வாழ்க்கையும் அப்படி தான் பல முறை பலமாக அடி வாங்கின பிறகு - இதற்கு மேல் தாங்கவே முடியாது என்ற கட்டத்திற்கு மனம் வந்து விடும். தெருக்களின் நிலையும் அப்படித்தான். தேய்ந்து தேய்ந்து ஓடாய் போய் விட்டது. பாவமாக இருந்தது. 

மனித மனமும் உடலும் தாங்கும் வரை தான் தாங்கும். பின்னர் விரக்தி, சோகம், இனம் புரியாத வலிகள். ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பு தட்டி விடும். எதையுமே நிதானமாக யோசிக்க வைக்கும். காலையிலேயே மனச்சிதறல்கள்.

ஒருவன் செடிகளுக்கு நீருற்றுகிரான் தினமும் ஆனால் ஏன் என்று தெரியாமலே?

இன்னொருவன் நம் தங்கிய அறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு பிரதிபலன் இன்றி செல்கிறான்.

மற்றொருவன் ஒரு பக்கம் துணிகளை துவைத்து இஸ்திரி போட்டு கொண்டு வந்து தருகிறான்.

ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு புறம் குழப்பம். கலவையான எண்ணங்கள். அதற்குள் இது போன்ற சிந்தனைகளை கலைத்தவாறே - காற்றை கிழிக்கும் குரல். 
 
"பசும்பால் மட்டும் வாங்கிண்டு வாங்க"

"சரி இதோ போறேன்".

படித்ததில் பிடித்தது.

#rameshmuthuvel

0 comments: