This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, October 16, 2013

புத்துயிர் பெறுமா வண்ணத் தூதர்கள் வாழ்க்கை?

"பூமியில் இருந்து தேனீக்கள் அழிந்துவிட்டன என்றால், அதற்குப் பிறகு மனிதனால் அதிகபட்சம் நான்கைந்து ஆண்டுகளே வாழ முடியும்." என்றார் அறிவியலாளர் ஐன்ஸ்டீன். தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை செய்யும் திறனின் முக்கியத்துவத்தை உணர்த்தவே அவர் அப்படிச் சொல்லியிருந்தார். தேனீக்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், வண்ணத்துப்பூச்சிகளுக்கும் மகரந்தச் சேர்க்கையில் பங்கு உண்டு.
பூச்சிகள் உலகின் அதிசயம் வண்ணத்துப்பூச்சிகள். பூக்களுடன் பூக்களாக, கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்கள் நிறைந்த இறக்கைகள்தாம் அவற்றின் சிறப்பு. ஆனால், உலகெங்கிலும் தேனீக்களின் எண்ணிக்கை சரிந்து வருவது போலவே, வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது, பூச்சியியலாளர்கள் இடையே வருத்தத்துக்குரிய விஷயமாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கவலைக்குரிய விஷயம் குறித்து ‘ஐ.வி.ஆர்.ஐ.‘ எனப்படும் இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தில் சமீபத்தில் நினைவுகூரப்பட்டது. உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இங்கு‘பருவநிலை மாற்றம் ஏற்படும் பின்னணியில் கால்நடைகளின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐ.வி.ஆர்.ஐயின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எம்.பி.யாதவ் வண்ணத்துபூச்சிகள் அருகி வருவதைப் பற்றிப் பேசினார்.
‘வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதைச் சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. இது, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுப் பயிர்களைப் பாதிக்கிறது. இதனால், சுமார் 20 சதவிகித பயிர்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளும் கவலைக்குள்ளாகி இருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், பயிர்களுக்குப் பயன்படுத்தும் வேதிஉரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள்தாம். இவற்றை உருவாக்கும்போது வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட நன்மை பயக்கும் பூச்சிகளின் உடல்நலத்தைக் கவனத்தில் கொள்வதில்லை’ என வலியுறுத்தினார்.
இது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ஹர்ஜிந்தர் சிங் ரோசிடம் பேசினோம். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தற்போது, சண்டிகரிலுள்ள ஷாஹீத் உத்தம் சிங் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றுகிறார். இவரது ஆய்வுகள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன.
‘இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வண்ணத்துப்பூச்சிகளின் புகலிடம் எனக் கருதப்படுகின்றன. இந்தியாவில் 1,500 வகை உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், இது எந்த அளவுக்கு என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. காரணம், நம் நாட்டில் இவற்றின் மொத்த எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை. இதனால், மிகுந்த பயனை அடைந்த மலர் மற்றும் பழப் பயிர் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை வைத்துதான், வண்ணத்துப் பூச்சிகள் சரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காடுகள், பூங்காக்களில் வளரும் மில்கிவீட் (எருக்கம் வகை) செடிகளின் பூக்களில்தாம் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக முட்டைகளை இடுகின்றன.
தற்போது இந்த இரண்டு வளமுமே அழிந்து வயல்கள் மற்றும் வாழிடங்களாக மாறி வருவதால் வண்ணத்துப்பூச்சிகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. இதற்குப் புவி வெப்பமடைதலும் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக வண்ணத்துப்பூச்சிகள் நல்ல நிலையில் வாழ குறைந்தது 60 முதல் 70 சதவிகிதம் ஈரப்பதமும், 25 முதல் 28 டிகிரி வெப்பநிலையும் தேவைப்படுகிறது. இதனால்தான், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரதேசங்களில் மட்டும் உயர்ந்த வகைகளான ‘அப்பலோ’ அல்லது ‘குளோப்’ என அழைக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன.’ என விளக்கியவர், வண்ணத்துப்பூச்சிகள் கடத்தப்படுவது பற்றியும் பேசினார்.
‘வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டப்படி வண்ணத்துப்பூச்சியும் நம் நாட்டில் பாதுகாக்கப்பட்ட ஒன்றுதான். இதைப் பிடித்து அழிப்பதும், விற்பதும் சட்டப்படி தண்டனைக்குரியது. ஆனால், சிறுத்தை, புலி, யானை எனப் பெரிய விலங்குகளைப் பற்றி கவலைப்படுவதில் கால்வாசிகூட, இந்தச் சிறுபூச்சிகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதன் விளைவாக நாடு முழுவதும் வண்ணத்துப்பூச்சி உட்பட பல்வேறு வகை பூச்சிகள் ரகசியமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. உதாரணமாக, அப்பலோ வகை வண்ணத்துப்பூச்சிகள் ரூபாய் 25,000 வரை வெளிநாட்டில் விற்கப்படுகின்றன. இதன் இறக்கைகளை வெட்டி அழகான காட்சிப் பொருளாக ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள். சில வருடங்களுக்கு முன் 14,000 வண்ணத்துப்பூச்சிகளுடன் இமாச்சல பிரதேசத்தில் இரு மங்கோலியர்கள் பிடிப்பட்டனர்.
வண்ணத்துப்பூச்சிகளைப் போல் நம் நாட்டில் பயிர்களைப் பெருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் உள்ளன. சுற்றுலாவுக்கு வரும் சில வெளிநாட்டினர் நமக்கே தெரியாமல் நம் நாட்டு பூச்சிகளைப் பிடித்துச் சென்று ஆய்வுசெய்கிறார்கள்.’ எனக் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில், நம் நாட்டிலேயே இந்தப் பூச்சியைப் பாதுகாக்க முயலும் முதல் மாநிலமாக விளங்குகிறது தலைநகரமான டெல்லி. இதன் மாநகராட்சி அமைப்பான புது டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் அங்குள்ள லோதி பூங்காவின் 90 ஏக்கரில் வண்ணத்துப்பூச்சி வளர்ச்சிக்காக மூன்று ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘ஏழு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் இதுவரை 75 வகை வண்ணத்துப்பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு வண்ணத்துப்பூச்சிகளுக்காக அவை விரும்பும் குறிப்பிட்ட செடிகளை ஆரவல்லி மற்றும் யமுனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பல்லுயிர்ப் பூங்காவாக வைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க, அந்தச் செடிகளில் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி வருகிறோம். இதன் பயனாகச் சில மாதங்களில் வண்ணத்துபூச்சிகளின் அதிகமான கூடுகள் (பியூபாக்கள்) தருவதைப் பார்க்க முடிகிறது.’ என்கிறார் பூங்காவின் தொழில்நுட்ப ஆலோசகரான டெல்லி பல்கலைகழகத்தைச் சேர்ந்த எம்.சாஹா உசைன்.
தமிழகத்திலும் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற பூங்காக்கள் மூலம் எஞ்சியிருக்கும் வண்ணத்துப்பூச்சி வகைகள் எதிர்காலத்தில் காப்பாற்றப்படும் என்று நம்புவோம்.

மனித வளம்: மனிதனும் தெய்வமாகலாம்

முதலில் ஒரு பள்ளி ஆசிரியை கொலை. இப்பொழுது கல்லூரி முதல்வர். இரண்டும் தண்டனை பெற்ற மாணவர்களின் வெறிச்செயலால் நிகழ்ந்த கொடூரங்கள்.
உளவியல் ஆலோசகர்கள் பள்ளி/ கல்லூரிகளில் கட்டாயம் தேவை என்கிற குரல் வழக்கம் போல சில காலம் ஒலித்து ஓயும்.
உளவியல் ஆலோசகர்கள் நியமனம் பற்றி பேசுவதற்கு முன் இன்னும் சில தண்டனை கொடுத்து உயிர் விட்டவர்களின் கதைகளைப் பார்க்கலாம்.
சென்ற ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, தன்னால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளியின் கொடுவாளால்- இரவு உணவு சாப்பிடும் போது தன் இல்லத்திலேயே- உயிர் விட்டான் என் நண்பன் ராஜ ராஜேஸ்வரன். விருதுநகர் ராம்கோ சிமெண்டில் நடந்த பயங்கரம் இது. இதற்கு முன் கோவை ப்ரிக்காலில் இதே போன்ற சம்பவம். இருவரும் மனித வளத்துறை தலைவர்கள். இரண்டு சம்பவங்களும் மாருதியில் நடைபெற்ற படுகொலை அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்காதது பெறும் சோகம்.
ஆசிரியரோ மேலாளரோ- உயர் நிலையிலிருந்து யார் தண்டனை அளித்தாலும் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதும், அதனால் அவர்களின் உறவு நிலை பாதிக்கப்படாமல் இருந்ததும் முன்பொரு காலத்தில். அதை பொதுப்படையாக “கால மாற்றம்” என்று எடுத்துக்கொள்ளாமல் அது ஏன் என்று பகுப்பாய்தல் அவசியம்.
படிக்க, வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தாலே அரிது அப்போது. அதனால் ஒரு சார்புத்தன்மை இருந்தது. அதிகாரத்தை வணங்கும் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. மீறல்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தாலும் நெறி பின்பற்றப்பட்டது. அதிகாரத்தில் அனேகம் பேர் “முன் மாதிரிகளாய்” திகழ்ந்தார்கள். நியாயம் பெரிதும் மதிக்கப்பட்டது. பரஸ்பர அன்பும், மரியாதையும் அதிகம் இருந்தது. கல்வி/ தொழில் மையங்களில் சட்டமும், தண்டனையும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று பன்னாட்டு வியாபாரச் சூழலில் கல்வி, மருத்துவம், தொழில் எல்லாம் வர்த்தகம் மட்டுமே பிரதானமாக கொண்டு இயங்கும் இந்த நிலையில், ஆசிரியர்- மாணவர் மற்றும் மேலாளர்- பணியாளர் என இரு அடுக்குகளும் தீராத மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தான் நிஜம். காரணங்கள் தான் வேறு வேறு. மனித உறவுகளை பேண அவசியமோ அவகாசமோ இல்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்காத நாட்களில் இதை ஒரு பொருட்டாகக் கூட யாரும் பேசுவதில்லை.
நம் படங்கள் நாயகர்கள் சரக்கடிப்பதையும், ஃபிகரை (பெண்ணினத்தின் தற்போதைய திரைப்பட அடையாளச் சொல்) துரத்தி கரெக்ட் பண்ணுவதையும், நண்பனுக்காக ஆளை போட்டுத்தள்ளுவதையும் தான் அதிகம் காட்டுகிறது.
நாம் குடியை அனுமதித்து விட்டு குற்றங்கள் பெருகி வருகிறது என்று ஒப்பாரி வைக்கிறோம்.
இன்றைய இளைஞர்களிடம் பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றி என்ற எண்ணமும், அதையும் வெகு சீக்கிரமே அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை.
தவிர தொழில்நுட்பம், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச உறவுகளையும் சுருக்கி வருகிறது. மொபைல் வாங்குவதும், புது மொபைல் மாற்றுவதும் சமூக அந்தஸ்து தருகிறது இவர்களுக்கு. இந்த நிலையில் தன் உணர்வுகளை அறிந்து கொள்ளும் அறிவோ, உறவுகளை புரிந்து கொள்ளும் முயற்சியோ, சுய அலசலுக்கான ஆன்மிகத் தேடலோ, இலக்கியம்/ நல்ல திரைப்படம் பற்றிய ஆய்வோ, நல்ல மனிதர்களின் வழி நடத்தலோ இன்று பெரும்பாலும் பலருக்கு வாய்க்கவில்லை என்பதுதான் நிஜம்.
இந்த விளிம்பு நிலையில்தான் பலர் உள்ளனர். ஆசிரியர்- மாணவர் மற்றும் மேலாளர்- பணியாளர் என இரு அடுக்குகளுக்கும் இது பொருந்தும்.
குற்றம் நிகழ்வதற்கான செழுமையான மண்ணாக மாறி வருகிறது நம் சமூகம். இதில் குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டும் குற்றங்களை க் கட்டுப்படுத்தாது.
உளவியல் ஆலோசனை உதவுமா?
உதவும்தான். ஆனால் எங்கிருக்கிறார்கள் ஆலோசகர்கள்? நம் தேவைக்கு ஏற்ற தகுதி வாய்ந்தவர்கள் மிக மிகக் குறைவு. இன்னொரு அபாயம் ஒன்று பெருகி வருகிறது. ஆசிரியர்களும் மேலாளர்களும் சில புத்தகங்கள் அல்லது வெறும் ஒரு நாள் பயிற்சி மேற்கொண்டு ஆலோசகர்கள் ஆகி விடுகிறார்கள்.
சமீபத்தில் நான் நடத்திய ஆலோசனை முகாமில் பங்கு கொண்டு என்னிடம் பேசிய ஒரு கல்லூரி முதல்வர் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது: “இத்தனை வருடங்களாக கவுன்சலிங் என்ற பெயரில் வெறும் அறிவுரைதான் செய்து வந்திருக்கிறேன் என்று இன்று புரிந்தது!”
தமிழகத்தில் எத்தனை கல்லூரிகளில் முறையான சைக்காலிஜிக்கல் கவுன்சலிங்க் படிப்புகள் உள்ளன? அவற்றை முடித்தவர்களுக்கு உடனே வேலை கிடைக்கிறதா? வருங்காலத் தேவைகளுக்கு ஏற்ற வல்லுனர்களை உற்பத்தி செய்ய என்னத் திட்டம்?
பள்ளிக்கூடங்களை கூட விடுங்கள். எல்லா தொழிற்சாலைகளிலும் ஆலோசகர்கள் உண்டா?
உற்பத்தித்திறனுக்குக் கொடுக்கும் பயிற்சியும் ஆலோசனையும் உறவுத்திறனுக்கு அளித்திருக்கிறோமா? ஒரு நல்ல உரையாடல் பல வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும். இதை முழுதும் நம்பினால் ஏன் உரையாடல் திறனை வளர்க்கும் உளவியல் பயிற்சியை எல்லா மனித வள மேலாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கத் தவறுகிறோம்?
ஆரோக்கியமான உரையாடல் நிகழ்த்தத் தவறியதால்தான் பல உயிர்களை இழந்து வருகிறோம்.
சம்பவம் நடந்தவுடன் எழும் கூச்சல் மெல்ல காற்றில் கரைகிறது.
சட்டத்தை வலுப்படுத்துதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குற்றத்தை தடுக்க எடுக்கும் எல்லா வளர்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதலும்.
அற்புதமாக இயங்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் சட்டத்தாலும் கட்டுப்பாட்டாலும் மட்டும் கொண்டு வரப்பட்டவை அல்ல! அது மனித மூளைகளாலும் இதயங்களாலும் உருவாக்கப்பட்டவை.
“ஒரு பிரச்சினை என்றால் என்னிடம்தான் முதலில் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்பான். நான் சொன்னால் கண்டிப்பாகக் கேட்பான்!” என்று ஒவ்வொரு பள்ளியிலும், பணியிடத்தில் இன்றும் சிலர் சொல்லிக் கேட்கிறோம். அவர்களிடம் உள்ள சூட்சமம் என்ன? அதை எல்லாரும் ஏன் செய்ய முடியவில்லை?
இன்று கம்ப்யூட்டர் எல்லா பாடத்தையும் சொல்லிக் கொடுக்கும். “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்று ஆகி வரும் காலத்தில் அன்பு செலுத்த, ஆலோசனை சொல்ல, அரவணைக்க, நம்பிக்கை வைக்க, பக்குவப்படுத்த.... ஆசிரியர்கள் தேவை.
ஆசிரியராக அறிவை விட அன்பு தேவை. இதை உணரும் காலத்தில் பள்ளிகளில் வன்முறை ஒழியும்.
தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தும் மனிதனிடம் வன்முறையைக் காட்ட எந்த மாணவனுக்கும் மனம் வராது.
உலகில் ஐந்து சதவிகிதம் குற்றவாளிகள் என்றாலும் மீதமுள்ள 95% மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்று நாம் அனைவரும் நம்மையே கேட்டுக்கொள்வோம்.
மனிதனும் தெய்வமாகலாம். மனிதன் மிருகமாகவும் ஆகலாம். அது பல நேரங்களில் அவன் உறவு கொள்ளும் சக மனிதர்களைச் சார்ந்தது.
இந்த கோர சம்பவங்களில் இரு பக்கமும் பாதிக்கப்பட்டவர்கள்தான். பள்ளி, கல்லூரி, தொழில் அதிபர்களுக்கு வெறும் அவப்பெயர் மட்டும் தான் அதிக பட்ச நஷ்டம். சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு...? அவர்கள் குடும்பங்களுக்கு...?
“உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இன்று முடியலாம்...
முடிவிலும் ஒன்று தொடங்கலாம்...!”
இது கவிஞர் கண்ணதாசனின் பாடல்.
சின்ன உணர்வுக்காக பெரிய உறவையும் – உயிரையும்- இழக்காமல் இருக்க நம் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்போம்!

மாற்றத்தின் வித்தகர்கள் - 3: குறுங்காடு தங்கசாமி

  • குறுங்காடு தங்கசாமி
    குறுங்காடு தங்கசாமி
தமிழ்நாட்டில் இயற்கை ஆர்வலர் மத்தியில் பிரபலமான ஒரு பெயர் சேந்தங்குடி தங்கசாமி. ‘மரம் தங்கசாமி’என்று சொன்னால், பெயர் எளிதில் விளங்கும்.
ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை எல்லோராலும் எழுதப்பட்டது. அது சுயமுன்னேற்றக் கதை. தங்கசாமியிடம் நம் சமூகம் கவனிக்காமல் விட்ட இன்னொரு கதை உண்டு - எதிர்கால இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விதை அது - குறுங்காடு வளர்ப்பு!
பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு வீடு. வீட்டையொட்டி சின்னதாய்க் காய்கறித் தோட்டம். சுற்றிலும் குறுங்காடு. ஆமாம், சின்னக் காடுதான் அது. புன்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, அழிஞ்சி, நாட்டு வாதுமை, புங்கன், பெருங்காலி, தங்கபட்டி, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, செண்பகம், கறிவேப்பிலை, வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியம், வாகை, கொண்டைவாகை, இயல்வாகை, வாதநாராயணம், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி, நாவல், நெல்லி, பலா, வில்வம், மா, இலுப்பை, கொடுக்காப்புளி, சப்போட்டா, இலந்தை, சீதா, மாதுளம், அரநெல்லி, கரம்போலா, கொய்யா, கம்பளி, அகத்தி, அத்தி, அழிஞ்சி, பூமருது, அசோகா, மயில் கொன்றை, திருவாட்சி, மந்தாரை, கொக்கு மந்தாரை, மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, நெருப்புக் கொன்றை, தேக்கு, சந்தனம், ஆலம், அரசம்... நூற்றுக் கணக்கான மரங்கள் அல்ல; வகைகள். ஏழாயிரத்துச் சொச்ச மரங்கள். கூடவே, சிறிதும் பெரிதுமான பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள்... இதுதான் தங்கசாமியின் குறுங்காடு.
ஒருகாலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வெம்மைக்கும் வறட்சிக்கும் சரியான உதாரணம் தங்கசாமியின் ஊரான சேந்தங்குடி. இன்றைக்கு அந்தப் பிரதேசத்துக்குள் நுழையும்போதே காற்றில் குளுமையை உணர முடிகிறது. எங்கும் பசுமை வியாபித்திருக்கிறது. 46 ஆண்டுகளில் தங்கசாமி உருவாக்கிய மாற்றம் இது.
“பாரம்பரியமான வெவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதும் வெவசாயத் துறையிலேயே வேலை கிடைச்சுது. வீட்டுல சொன்னாக, ‘யப்பா... வீட்டுக்கு நீ ஒரே புள்ள. நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டீன்னா, குல வெவசாயம் செத்துப்போகும்’னு. சரிதான்னுட்டு, பயிற்சியை மட்டும் முடிச்சுப்புட்டு வயக்காட்டுக்கே வந்துட்டேன். படிச்ச ஆளு, அதுவும் அப்ப வெவசாயப் பயிற்சி வேற எடுத்துக்கிட்ட துடிப்பு, ஊரு முழுக்கப் பச்சைப் புரட்சியைப் பேசுறான்... சும்மா பழைய வழியிலேயே போவ முடியுமா? நவீன வெவசாயம்… நவீன வெவசாயம்னு கூவிக்கிட்டு உரம், பூச்சிக்கொல்லில தொடங்கி பட்டுப்பூச்சி, தேனீ வளர்ப்பு வரைக்கும் போய்ட்டேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் காலி. 30 ஆயிரம் கடன். 1960-ல 30 ஆயிரம் எவ்வளவு பெரிய தொகை? ஒரு குடியானவன் சேத்து அடைக்குற காசா அது? மனசு விட்டுப்போச்சு. தற்கொலைதான் கடைசி வழின்னு தோணுச்சு. ஒடிஞ்சு உட்கார்ந்துட்டேன்.
அப்போதான் ரேடியோல ஒரு குரல். சீனிவாசன் ஐயா பேசுறார். ‘மரப் பயிறும் பணப் பயிரே...’, ‘தோப்பில்லா குடும்பத்துக்குக் காப்பில்லை’னு. அப்படியே கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு மரத்தைக் கட்டிக்கிட்டேன். வெவசாயம் பண்றதுக்குத்தானே தண்ணியோட்டம் உள்ள பூமியா இருக்கணும்? மரம், பூமிக்கேத்த மாதிரி நடலாம். அங்கேயும் இங்கேயுமா இருந்த வயவாய்க்கால் எல்லாத்தையும் பங்காளிங்ககிட்டே கொடுத்துட்டு, கடனை அடைச்சேன்; ஒரே இடத்துல பத்து ஏக்கராவா சேர்த்து வாங்குனேன். மரக்கன்னா நட்டேன். கொஞ்ச வருஷம். நட்டேன். வெட்டுனேன். நட்டேன். வெட்டுனேன். தேவையான காசு வந்துடுச்சு. ஒரு நா விடியக்காலையில முழிச்சுப்பார்க்குறேன். அது நா வரைக்கும் நான் மரமா பார்த்தது எல்லாம் திரண்டு காடா நிக்குது. சத்தியமா அன்னைக்கு வரைக்கும் மரத்தைக் காசாத்தான் பார்த்தான் இந்தத் தங்கசாமி; ஆனா, காடு காசு இல்லை; அது சாமி. பொறி தட்டிடுச்சு. ‘தங்கசாமி இனி உனக்கு வேலை இதுதான்டா’ன்னு.
அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் காடுதான் என் மூச்சுலேயும் பேச்சுலேயும் கலந்துகெடக்கு. யாரு என் வீட்டுக்கு வந்தாலும் சரி; யாரு வீட்டுக்கு நான் போனாலும் சரி... மரக்கன்னு ஒண்ணைப் புடிச்சு நட்டுடறது. வீட்டுல எந்த விசேஷ நாள்னாலும் மரக்கன்னை நட்டுப்புடுறது. இன்னைக்கு என் கை பட்ட மரக்கன்னு உலகம் முழுக்க முளைச்சுக் கெடக்கு. நம்புவீங்களா, கோடி வெதை, கன்னுங்களைத் தன் கையால கொடுத்திருக்கான் தங்கசாமி. என் மவன் கல்யாணத்து அன்னைக்கு மட்டும் ஊருல 10 ஆயிரம் கன்னுகளைக் கொடுத்தேன். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல்னு எங்கெங்கோ இருந்து வர்ற புள்ளைங்க இந்த வெவசாயிகிட்டே இருந்து பாடம் கத்துக்கிட்டுப்போவுதுங்க.
ஆனா, இந்தக் கதை எல்லாம் இப்போதான். ஆரம்பத்துல சுத்தி நின்ன அத்தனை பேரும் என்ன சொன்னான் தெரியுமா? தங்கசாமி ஒரு லூஸுப் பையன்னான். அப்புறம், தங்கசாமி மாதிரி நம்மளும் மரம் நட்டுக் காசு பார்க்கலாம்னு எல்லாரும் மரம் நட்டான். இங்கே நான் சுட்டிக்காட்டணும்னு நெனைக்குற விஷயம் ஒண்ணு உண்டு. மரம் வளர்க்குறதுக்கும் குறுங்காடு வளர்க்குறதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மரம் வளர்க்குறது நீங்க ஒரு வீடு கட்டுற மாதிரி; குறுங்காடு வளர்க்குறது ஒரு அரண்மனையையே கட்டி எல்லாருக்கும் இடம் கொடுக்குற மாதிரி. ஒரு ஆச்சரியம் என்னன்னா, வீடு கட்டுறதைவிட அரண்மனை கட்டுறதுதான் எளிமையான விஷயம்கிறதுதான். மரம் வளர்க்குறது ஒரே மாதிரி மரங்களா பத்திவிடறது. குறுங்காடு வளர்க்குறது எல்லா வகை மரங்களுக்கும் இடம் கொடுக்குறது.
மரங்கள்ல பூமிக்குச் சத்து கொடுக்குற மரங்களும் உண்டு; பூமிகிட்டே இருந்து சத்தை எடுத்துக்குற மரங்களும் உண்டு. குறுங்காடுங்கிறது இந்த ரெண்டு வகை மரங்களையும் உள்ளடக்கினது. மனுஷங்களுக்கான பூ மரங்கள் - பழ மரங்கள் மட்டும் இல்லை; பறவைங்க விரும்பி வர்ற மரங்களும் இங்கே இருக்கும். காரண காரியங்கள் இல்லாம வளர்க்குற மரங்களுக்கு இடையிலேயே செஞ்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், வாழை, தென்னைனு காசு பார்க்க என்னென்ன மரங்கள் வேணுமோ அதுகளையும் நாம வளர்த்துக்கலாம்.
ஒரு முத்தின செஞ்சந்தன மரம் விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. நான் எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன்? பாம்பு, பல்லியில ஆரம்பிச்சு எந்தெந்த மூலையில இருந்தோ இங்கே வர்ற பேர் தெரியாத பறவைகள் வரைக்கும் இந்தக் காட்டுல ஆயிரமாயிரம் உயிரினங்கள் வாழுது. எனக்கு எவ்வளவு சொந்தஞ்சோளி?
நம்ம வெவசாயிகளுக்கு நான் சொல்றது சின்ன யோசனைதான். உங்க நெலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணாப் பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி நாசமாப் போங்க - அது உங்க உரிமை, கடமை. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும். பெருகுற மக்கள்தொகையால கெடுற சுற்றுச்சூழலையும் உணவுத் தேவையையும் சமாளிக்கணும்னா, தரிசாக் கெடக்குற நெலத்திலெல்லாம் பல வகை மரங்களை நடணும்” - தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.
பக்தர்கள் மலைக்கு மாலை போடுவதுபோல, தங்கசாமியும் மாலை போடுவது உண்டு. இது 18-வது வருடம். ஆண்டுதோறும் மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, குடுமியான்மலை, ஆடுதுறை என்று வேளாண் மையங்களுக்குச் சென்று விரதம் முடிக்கிறார். போகும் வழிநெடுக குறுங்காடு பிரச்சாரம். “இந்த நாடு விவசாயிகளின் நாடு; இந்த நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்கும்” என்கிற காந்தியின் வார்த்தைகள்தான் தங்கசாமியின் இயக்கத்துக்கான ஆதார சுருதி. தன்னுடைய பயணத்தில் தங்கசாமி தவறாமல் வலியுறுத்தும் காந்தியின் வார்த்தைகள் இன்னும் சிலவும் உண்டு: “எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றும் வல்லமை இந்த பூமிக்கு உண்டு; ஆனால், எல்லாருடைய பேராசையையும் நிறைவேற்றும் திராணி அதற்குக் கிடையாது!”

'கிராவிட்டி' - விண்வெளி விபரீதம்

Cast Away, 127 hours, Life of Pi போல, சர்வைவல் (உயிர்வாழ வேண்டும் என்ற உந்துதல்) என்பதை அடிப்படையாகக் கொண்ட பல படங்கள் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கின்றன (தமிழில் மரியானைத் தவிர எதுவும் தோன்றவில்லை). ஒரு சாதாரண மனிதன், விதி வசத்தால் தனியாளாக எங்கேயாவது மாட்டிக்கொண்டு, அங்கிருந்து வீடு திரும்பப் படும் பாடுகளே, இவ்வகைக் கதைகளின் அடிப்படை. இந்த வகையான படங்கள், பத்தில் ஒன்பது, கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் உயிர் பிழைத்துவிடும் என்பது வரலாறு. அப்படி சமீபத்தில் வந்து ஹிட்டடித்திருக்கும் படம்தான் 'கிராவிட்டி'.
ஒரு விண்கலத்தைப் பழுதுபார்க்கும் போது ஏற்படும் விபத்தால், அந்த விண்வெளி வீரர்களின் குழுவில் அனைவரும் இறந்து போக, புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் சாண்ட்ரா புல்லக் (SPEED பட நாயகி) மட்டும் உயிர் பிழைக்கிறார். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சங்கதிகளும் சேதமாகியிருக்க, பக்கத்தில் (100கி.மீ தொலைவில் !) மிதந்து கொண்டிருக்கும் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை எப்படியாவது அடைந்தால், உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில், பல்வேறு, அக + புறத் தடைகளைத் தாண்டி, சாண்ட்ரா எப்படி பூமிக்கு வருகிறார் என்பதே கதை.
படத்தில், ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கிளேஷக்களில் இருந்து, பலவகையில் நிவாரணங்கள் உள்ளன. படம் 3198ஆம் வருடம் நடக்கவில்லை. வேற்றுகிரக வாசிகளின் அட்டூழியம் இல்லை, யார் வயிற்றையும் கிழித்துக் கொண்டு, விசித்திரமான ஜந்துக்கள் வரவில்லை, வித்தியாசமான ஆயுதங்கள் இல்லை, எல்லாம் வெடித்துச் சிதறும் நேரத்தில், நாயகன் நாயகியின் பாழாய்போன (உதட்டோடு உதடு) முத்த்த்தக்காட்சி இல்லை... இப்படிப் பல.
படத்தின் பிரதானப் பாத்திரம், சாண்ட்ரா புல்லக் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் ஆகாய மார்க்கத்தில் சீக்கிரம் பரமபதம் அடைகிறார்கள். படத்தினை ஒற்றை மனுஷியாக, தோளில் சுமக்கிறார். புதிதாக பயிற்சி முடித்து, விண்ணிற்கு வந்திருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதிலிருந்து, மெல்ல மெல்ல, தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படும் சூழல் வரை, மகிழ்ச்சி, பயம், தவிப்பு, இயலாமை எனப் பல்வேறு விதமான உணர்ச்சிகளை, அவ்வளவு பெரிய விண்வெளி உடைக்குள்ளிலிருந்து அள்ளித் தெளிக்கிறார். பல சமயங்களில், அவர் கண்ணும், உடல் மொழியும் மட்டுமே நமக்குத் தெரிகிறது. சான்ட்ராவிற்கு அடுத்து, ஜார்ஜ் க்ளூனி, 20 நிமிடம் சிறப்பாக கௌரவித்துவிட்டுச் செல்கிறார்.
இவர்களைத் தாண்டி, நம்மை படத்தோடு ஒன்றச் செய்வது, அதி துல்லியமான கிராபிக்ஸ், அதன் காட்சியமைப்பு, இசை மற்றும் ஒலி. படத்தின் ஒவ்வொரு நொடியிலும் கிராபிக்ஸ் வியாபித்திருக்கிறது. வான்வெளி, அங்கிருந்து தெரியும் பூமி, நட்சத்திரக் கூட்டம், உடையும் விண்கலம், சுழற்சியில் இருக்கும் உடைந்த பாகங்கள், விண்கலத்தின் உள் மிதக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் என, கிராஃபிக்ஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். 3டி, அதை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. வீரர்கள் மிதக்கும் போது, அவர்களுடனே மிதப்பது போல, சுக்கு நூறாக வெடித்துச் சிதறும் பாகங்கள், நம்மைச் சுற்றி இருப்பதைப் போல உணர முடிகிறது. 'அவதார்' படத்திற்குப் பிறகு, பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது 'கிராவிட்டி'.
படத்தை இயக்கி, திரைக்கதையிலும், படத்தொகுப்பிலும், தயாரிப்பிலும் பங்கெடுத்திருப்பவர், மெக்ஸிக திரைப்பட இயக்குனர், அல்ஃபோன்சோ கௌரன். ஏற்கனவே சில்ட்ரன் ஆஃப் மென், ஹாரிபாட்டரின் மூன்றாவது பாகம் என ஒரு சிலப் படங்களை இயக்கி, விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவர். அவரது இந்த முயற்சி, கண்டிப்பாக ஹாலிவுட்டில் ஒரு மைல்கல்.
வெறும் கிராஃபிக்ஸ் பூச்சை மட்டுமே நம்பாமல், ஒரு சாதாரணள், அசாதாரணமான தருணங்களை எப்படியெல்லாம் எதிர் கொள்கிறாள் என, தனி மனித உளவியிலை மையமாக வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார். சாண்ட்ரா, தற்கொலை செய்து கொள்ளத் தயாராகும் காட்சி, ரேடியோவின் கிராஸ் டாக்கில் கேட்கும் பேச்சு, அதற்கு சாண்ட்ராவின் பதில் சிறந்த உதாரணங்கள். படத்தின் பல இடங்களில், மிஷ்கினைப் போல, நீளமான, வசனங்கள் குறைந்த / இல்லாத காட்சிகள், மேலும் அழுத்தத்தையும், பரபரப்பையும் கூட்டுகின்றன.
படத்தில் காண்பிக்கும் விண்வெளி சமாச்சாரங்கள் பெரிய ரீல், படத்தில், பல்வேறு இடங்களில், பல வகையான நுண் குறியீடுகள் உள்ளன என, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அசை போடத் தேவையான விஷயங்களை, இப்போதே இணையத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நல்ல ஒலி-ஒளி-3டி அமைப்புள்ள திரையரங்கில் 'கிராவிட்டி'யைப் பாருங்கள். உங்கள் வாழ்வில், 90 நிமிடங்கள் நீங்களும் விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.

Economy will pick up by year-end: RBI Guv Rajan.




India's economy will pick up by year-end thanks to the start-up of billions of dollars worth of stalled resource projects and a good monsoon season that will bolster agricultural production, the Reserve Bank of India's chief said on Tuesday. Also read: Asset quality won't improve unless economy revives: HDFC Bk The Reserve Bank of India is due to review monetary policy on October 29, with a rising pace of inflation bolstering odds for another central bank interest rate hike even as the economy stumbles through its worst crisis since 1991. "The correct question is: are you going to raise rates or not? The answer is: I'm not going to tell you," Raghuram Rajan told an academic audience at Harvard Business School in Cambridge, Massachusetts. He later said that he believed India's economic growth would start to pick up in the fourth quarter after a commission gave the green light to scores of resource projects that had been put on hold during a sweeping government review of transparency and environmental policy. He said about half of the USD 115 billion worth of stalled projects had been cleared. "The effects of that clearance will show up toward the end of the year. So growth will start picking up because these large projects will start coming back onstream," he said. He did not give a forecast for fourth-quarter growth. "The second piece of good news is the monsoon has been very good ... with a bountiful harvest, and with the associated activities like animal husbandry, poultry, also picking up, you can see a lot more value in the rural areas, which will help sentiment and growth," he said. India's economic growth has slowed sharply in recent years from around 8 percent per year between 2002 and 2012 to about 5 percent in 2012-13, while its current account deficit has ballooned and inflation has risen. Worries over the rising pace of inflation had already led Rajan to surprise markets last month with an interest rate hike of 25 basis points. Rajan said that investors were quick to blame structural dysfunction for India's economic troubles, but that the issues were more likely to do with the unwinding of stimulus in the wake of the global financial crisis, policy reviews stalling projects, and a spike-up in Indian demand for gold. "There's a lot that is going on to fix these medium-term problems," he said. "If you are an outsider looking at India, learn to filter out both the irrational exuberance and the excessive pessimism. We're subject to both. You will become manic-depressive if you follow our moods." He added that the question of using interest rates to address inflation was more complicated in India than in the United States. "In the US you know there is a large interest rate-sensitive sector that is going to be affected when you raise interest rates ... But what if you have a large part of the country that is not connected directly to the financial system?" he said, referring to India's massive rural population
.


Buffett: Debt limit is political weapon of mass destruction.


Warren Buffett, Chairman and CEO, Berkshire Hathaway




Warren Buffett said Wednesday the threat to not raise the nation's debt limit "after you've already spent the money" is a "political weapon of mass destruction" comparable to poison gas and shouldn't be used by either party. "I know it's been used in the past, but we used the atomic bomb back in 1945 but we decided we weren't going to do something like that again," he said hours before the government's midnight deadline to raise the debt limit or possibly default. Buffett called on both sides to pledge not to use the debt limit as a weapon. "There are plenty of weapons that can be used," like filibusters, he said. In a live interview on CNBC's "Squawk Box, the Berkshire Hathaway chairman said he doesn't expect the US will do anything to damage its 237-year reputation of paying its bills on time, but if it does it would be a "pure act of idiocy" and "asinine." Buffett said Berkshire owns short-term Treasury securities but he isn't worried about getting paid. He also said the ongoing crisis in Washington over spending and the debt limit is no reason to avoid buying securities, pointing out that Berkshire subsidiary Marmon Group just paid USD 1.1 billion for a British drinks dispensing business. "We did not buy it with a condition that we could call off the deal" if there was no vote to raise the debt limit, he said. He added that in his long career, he has never put off a deal by a few weeks to see what might happen in Washington
.


Coalgate: PM is equally responsible, says ex-coal secy.

The former coal secretary PC Parakh today said, “Prime Minister could have overruled my decision; everyone was equally responsible in the matter”, adding that he was not sure why the CBI had named him.



Even as corporate India reacts with shock and horror over the Central Bureau of Investigation (CBI) naming industrialist Kumar Mangalam Birla as an accused in an alleged faulty coal block allotment to his company Hindalco, former bureaucrat PC Parakh, who is the co-accused, hit out on the matter saying the responsibility was with Prime Minister Manmohan Singh too. The former coal secretary today said, “Prime Minister could have overruled my decision; everyone was equally responsible in the matter”, adding that he was not sure why the CBI had named him . While the CBI remains tightlipped on how it chooses to ignore that a secretary is only below the minister, top sources have told CNBC-TV18 that the agency’s 14 th FIR is not the end of the probe into the coal scam. At least two other conglomerates are facing an intense probe into coal blocks allotted to them for their power and steel businesses and some action could be expected soon. For the record, the Prime Minister’s Office said, “We have replied to all of this in Parliament. There is nothing new. Let the law take its course”. Government managers are hoping that Prime Minister Manmohan Singh will remain insulated from the fire and draw comfort from the fine distinction made by the Supreme Court with respect to the alleged role of other ministers in the 2G scandal. In the 2G cases, the CBI has charged both the secretaries and then ministers. The opposition doesn’t think much of this line of thinking. “Parakh is correct in saying that the PM is the prime accused in this, because he was the Coal Minister when the allotments were made,” said BJP leader Yashwant Sinha. Meanwhile, the CPI’s Gurudas Dasgupta said there should be an inquiry into the matter. Understandably, the Congress is chafing at the leash with Digvijay Singh warning that the “BJP should remember allocation policies were same during NDA” while I&B minister Manish Tewari said the entire matter was being investigated by the Supreme Court. It is the redoubtable, serial litigant Subramanian Swamy who provided a glimpse into why the PM may not be named after all.  Swamy said the PM’s signature does not appear anywhere in coal allocation files. “We would have taken Parakh’s statement seriously if he had said this before, but after having been declared an accused, his statement holds no credibility.” The CBI does not think much of the stunned reaction to its naming a famed industrialist, but is equally tightlipped as to what its future course of action is going to be, with officials only saying the decision would be taken at an appropriate time by Director Ranjit Sinha.

பெண்ணியம்...... எனது பார்வையில் - பகுதி 2

சில பெண்கள் தமது தனிப்பட்ட அபிலாசைகளை (உரிமை வேறு, ஆசை வேறு எனப்புரியாதவர்கள்) பூர்த்தி செய்வதற்காக பெண்ணியம் என்ற போர்வையைப் போர்த்துக் கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதாவது, தாம் விரும்பும் உடைகள் அணியவும், தம்மை அலங்கரித்துக் கொள்ளவும், களியாட்டங்களில் ஈடுபடவும் இன்னும் பல ஆடம்பரவிடயங்களில் ஈடுபடவும், தமது சில நடத்தைகளுக்காகவும்.... மற்றவர்கள் கருத்துச்சொல்லக்கூடாது என்பதற்காகவே, தாம் பெண்ணியம் பேசுவதாக எண்ணிக்கொண்டு `எமக்கு உரிமையுண்டு..,  ’ஆண்கள் செய்தால் தவறில்லை, நாங்கள் செய்தால் தவறா?` போன்ற கேள்விகளை எழுப்பும் போது மிகவும் பரிதாபமாகத்தான் தோன்றுகிறது.
இன்னும் சில மோட்டுத்தனமான பெண்ணியவாதிகள் குடும்பம் அல்லது திருமணம் பற்றி மிகவும் ஆபத்தான கருத்தை வளர்ந்துவரும் சமூகத்தில் விதைக்கிறார்கள். திருமணம் என்பது அவசியம் இல்லாத ஒன்று. அது சமூகத்துக்காக செய்யப்படுவதே..என்கிறார்கள்... ஆனால் இவர்கள் இயற்கையான பாலுணர்வை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்பாலுணர்வின் நிறைவு எமது சமூகத்தை, கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில்  திருமணம் என்ற கட்டமைப்புக்குள் மாத்திரமே சாத்தியம் என்பது இவர்களுக்கு கலாச்சாரக் கொடுமையாகத் தெரிகிறது.

அப்போ இவங்க என்னதான் சொல்ல வாறாங்க????
இப்படிப்பட்ட மட்டமான பெண்ணிய..... மன்னிக்கவும் இது பெண்ணியமே இல்லை.. எனவே இவர்களை நான் பெண்ணியவாதிகள் என்று குறிப்பிடாமலே விட்டுவிடுகிறேன். இத்தகையவர்கள் இன்னும் ஒரு பெரும் தவறைச் செய்கிறார்கள். இதையே தமது அல்லது தம்மைச் சூழ உள்ள பெண் குழந்தைகளுக்கும் திணித்து விடுகிறார்கள்... ஆரோக்கியமற்ற, சமூகக் கட்டுப் பாடற்ற ஒரு சந்த்தியைத் தோற்றுவிக்கும் அபாயத்தை இவர்கள் உண்டுபண்ணுகிறார்கள்.
தான் விரும்பிய ஆடையைத் தெரிவு செய்து அணிவது என்பது அவளது சுதந்திரம்... ஆனால் அந்த ஆடையின் தன்மையை அல்லது வடிவமைப்பை அவள் தெரிவு செய்வது விருப்பத்தினாலேயே... (என்ன குழப்புறேனோ...) நாகரீக மோகம் கொண்டு அரைகுறை ஆடைகள், அல்லது அங்கம் பிரித்துக் காட்டும் அதிக இறுக்கமான ஆடைகள் , அளவுக்கு மீறிய முக ஒப்பனை... எதுக்குங்க... சும்மா இருக்கிற ஆம்பிளைகளைக் கூட என்னைத் திரும்பிப் பார் என்று அழைக்கிறீங்க??? (”சும்மா இருக்கிற ஆம்பிளைகளை”... #பனைமரத்துக்கு சேலையைச் சுற்றிவிட்டாலும் அதைச் சுற்றிச் சுற்றி வரும் ஆண்களே... நீங்க இதில சேர மாட்டீங்க என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.... )
சிலர் இதற்கு ‘ஆடை அணிவது எமது சுதந்திரம்’ என்கிறார்கள்...
ஆடை அணிவது சுதந்திரம் தான்... ஆனால் இப்படி ஆடை அணிந்து நீங்கள் வெளியே காட்டுவது உங்கள் அந்தரங்கம் அல்லவா?... அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? மற்றவர்கள் தம் பார்வையைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை விட, நாம் நம்மை மாற்றுவது நல்லதல்லவா? ஆண்களைக் கவரும் அளவுக்கதிகமான உங்கள் ஒப்பனை இதோ உன் எதிர்ப்பாலினம் ஒன்று உனக்காக உன் கண்களுக்கு விருந்து கொடுக்கக் காத்திருக்கு என்று அழைப்பது போலல்லவா இருக்கு... இதன் மூலம் பெண்களை வெறும் மோகப் பொருளாகத் தோற்றுவிப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு கூட சில வேளைகளில் கேள்விக்குறியாகிவிடுகிறது.
சரி.. இந்தப் பெண்ணியம் பற்றிப் பேசுபவர்களைப் பற்றிய எனது பார்வையை நான் சற்று குறிப்பிட விரும்புகிறேன்.
இன்று உலகின் பல மூலைகளில் இருந்தும் பெண்ணியம் பேசும் குரல்கள் ஒலிக்கின்றன. அதற்கு ஆதரவான கரங்களும் நீள்கின்றன. அத்தனை பேரும் பெண்ணியம் பேசுகிறவர்கள் தானா, அல்லது நடைமுறைப்படுத்துபவர்களா என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுகின்றது. பலர் இதைத் தற்காலத்தில் அதிகமாகப் பேசப்படும் ஒன்றாக இருப்பதனால் பேசுகிறார்கள்.. கைதட்டல்களையும் வாங்கிக்கொள்கிறார்கள். இதனால் இது இவர்களது நடைமுறை வாழ்க்கையில் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை. குறிப்பாக சில மேடைப்பேச்சாளர்களும், சில எழுத்தாளர்களும் இந்த வட்டத்துக்குள் இறங்கி விடுவதுண்டு. இவர்கள் பெண்ணியம் மட்டுமல்ல, சாதியம், அடக்குமுறை என்பனவற்றுக்கு எதிராகவும் பேசுவார்கள், ஆனால் அவர்கள் வாழ்க்கையில் எதுவும் இருக்காது. இன்னும் சிலர் இருக்கிறார்கள்... இவர்கள் பெண்ணியம் பேசுவதன் மூலமே பெண்களை இலகுவாக அணுக முடியும் என்ற வக்கிர புத்தி உள்ளவர்கள்.. ஏனென்றால் இக்காலத்தில் பெண்கள் ஓரளவு விழிப்படைந்து விட்டது இவர்களுக்கு பேரிழப்பாகவே இருக்கிறது. எனவே விழிப்படைந்து விட்டவர்களை இந்த முறையில் அணுகுவது கொஞ்சம் இலகுவாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே பெண்களுக்கு உரிமைகள் இருக்கின்றன, கருத்து சுதந்திரம் இருக்கிறது எனக் கருதுபவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பதில்லை. செயலில் இறங்கி விடுவார்கள். அவர்கள் வாழ்க்கை இதற்கு ஒரு சாட்சி வாழ்க்கையாக இருக்கும். மேடைகளில் பெண்ணியம் பேசுவதலோ, அல்லது எழுதுவதாலோ மட்டும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொண்டவர்கள்.
முதலில் குடும்பத்திலும், பின்னர் உறவுகளிடையேயும், பின்னர் தன் கிராமத்திலும்...  என தொடர்ந்து பெண்ணியத்தை நடைமுறைப் படுத்துபவர்களாக இருப்பார்கள். இத்தகையவர்களைக் காண்பது அரிது.
பெண்ணியம் பேசும் பெண்களைப் பற்றி நான் சிந்திப்பதுண்டு. உண்மையிலேயே பெண்ணியம் பற்றிப் புரிந்து கொண்டு பேசும் பெண்களை காணும்போது எனக்கு அப்படித் தோன்றுகிறது. அவர்களிடம் நான் காணுவது முதலாவது, அவை அடக்கம்.  இது நான் மிகமிக வரவேற்கும் ஒரு விடயம். விதண்டாவாதம் பண்ணுவதும், பொது இடத்தில் நின்று எகிறிக் குதிப்பதும் பெண்ணியம் ஆகாது. உங்களிடம் இருக்கும் கருத்தை பொருத்தமான நேரத்தில் எடுத்து, நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் நச் என்று அடித்து விட்டு அமைதியாகி விடுங்கள். அந்தக் கருத்து தன்பாட்டுக்கு சமூகத்தில் வேலை செய்யும். இந்த புரட்சியை தமது ஆடைகளிலும், தமது ஆரோக்கியமற்ற நடத்தைகளிலும் வெளிக்காட்ட முயல்கிறவர்களை பெண்ணியம் பேசுகிறவர்களாக நான் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகையவர்கள் தமது விருப்பு வெறுப்புக்காக பெண்ணியத்தை ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்பவர்கள். இது கூட ஒரு பலவீனம் என்றே நான் கருதுகிறேன். இவர்கள் பெண் சமத்துவம் பேசுகிறவர்களாக இருக்கும் அதே வேளை மேலைத்தேய நாகரீக விரும்பிகளாகவும் இருக்கிறார்கள். இரண்டுக்கும் முடிச்சு போட்டு பெண் சமூகத்தையே குழப்புகின்றவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு சிலர் ஆணாதிக்கம் பற்றிய கருத்துக்களை தமது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்களின் வலிகளாக வெளிப்படுத்துகிறார்கள். இது தவறல்ல. அனுபவமே ஆசான் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது மட்டுமன்றி கருத்துக்கள் உணர்வுகளின் பிரசவிப்பே. ஆனால் அதனை மட்டுமே சுற்றிச் சுற்றி வருவது ஆபத்தை விளைவிக்கிறது.
இவர்கள் தம்மையறியாமலே தமது பாதிப்பைத்  சமூகத்துக்குள், முக்கியமாக தம் குடும்பத்திலுள்ள பெண் குழந்தைகளுக்குள் திணிக்க முயல்கிறார்கள். இதனால் இக்குழந்தைகள் சமூகம் பற்றிய அச்சம் உள்ளவர்களாகவோ அல்லது அவநம்பிக்கை உள்ளவர்களாகவோ வளரக் கூடிய சூழலை ஏற்படுத்தி விடுகிறோம். இவர்கள் வெளிப்படையாகவே ஆண்களை நம்பாதே என்று கூறி வருகிறார்கள்.
ஆண்கள் பற்றி விழிப்பாயிரு என்று கற்றுக் கொடுப்பது அவசியமானது தான். ஆனால் எப்போதும் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன் உலவும் இயந்திரங்களாக்கி விடாதீர்கள். என் சொந்த அனுபவத்தில் கூட நான் சந்தித்த ஆண்களில் 90 வீதமானவர்கள் தவறானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றால், அதற்காக மிகுதி 10 வீதத்தினரை புறம் தள்ளி விட நான் தயாராக இல்லை. அவர்களை இனம் காண வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அவர்கள் தான் இந்த சமூகத்தின் சீர் திருத்தத்திற்கு உதவக் கூடியவர்கள். அவர்கள் தான் அடக்குமுறையற்ற, நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் சமூகத்தை உருவாகத் தகுதியுள்ளவர்கள். இவர்களை இனம் காணுவதன் மூலம் அவர்களை இந்தவகையில்  நாம் ஊக்குவிக்க முயலலாம். இதற்கு இவர்கள் படிப்பறிவு உள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்கு உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. (அங்கே தேடினால் ஒரு வேளை தோற்றுப் போவீர்கள். பாமர மக்களிடையே தான் அதிகமாக பெண்மையை, பெண்களை மதிக்கிறவர்கள் இருப்பார்கள்). எனவே சொந்த வாழ்வின் அனுபவங்களைக் கொண்டு ஆணாதிக்கம் பற்றிப் பேசும் சகோதரிகள் தம்மை ஆராய்ந்து நிதானிக்க வேண்டியவர்களாகிறார்கள்.
ஆக மொத்தம், இக்கட்டுரையினூடாக நான் வலியுறுத்த நினைத்தது,  பெண்ணியவாதிகள் தாம் பேசுவது இன்னதென்று அறிந்து பேசவேண்டும்.
அவர்கள் கூறும் கருத்துக்கள் சுய தேவையை, அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கின்றதா, அல்லது சமூக அக்கறையில் பேசப்படுகிறதா? அவர்களது வாழ்க்கை சாட்சியான வாழ்க்கையாக இருக்கிறதா என்பதை தாமே நிச்சயித்துக் கொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். அது மட்டுமன்றி, வளர்ந்து வரும் பெண் சமுதாயம் எப்படி வழிநடத்தப் படுகிறது... அவர்கள் பெண்ணியம் சமத்துவம் என்ற பெயர்களில், ஆபத்தான வழியில் நடத்தப்படுகிறார்களா என்பதை இந்த சமூகம் அவதானித்து நெறிப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையதாகிறது...
தோழிகளே... அனைவரும் இணைந்து பெண்ணியம் பேசுவோம்.. பெண்களின் பெருமையை உயர்த்தும் வழியில் மட்டும்....

பெண்ணியம்.... எனது பார்வையில் பகுதி 1

பெண்ணியம் என்ற தலைப்பைப்  பார்த்ததும்  எதோ பெரிய அறிவாளி என்று எண்ணி விடாதீர்கள்.. பெண்ணியம் பற்றிப் பேசும் அளவுக்கு எனக்கு அறிவில்லை. இருந்தாலும் என் சிறு அறிவுக்குள் இது பற்றி என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன், எனவே என் சொந்த கருத்துக்கள் என்பதால் நண்பர்கள் யாரும் கருத்துப் பிழைகளை சுட்டிக் காட்டலாம். அது என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என நம்புகிறேன்.

பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை,சமத்துவத்தைப் நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலையை முடுக்கி விடும் ஒரு ஆயுதம் தான் பெண்ணியம் என்ற வாதம்.  பலர் இந்த உரிமைகளை இன்னொருவரிடமிருந்து(ஆணாதிக்கவாதிகளிடமிருந்து) பெற்றுக்கொள்வது என்று நினைப்பதுண்டு.. இல்லை... உரிமைகள் நாம் பிறக்கும் போதே எம்முடன் பிறந்து விடுகின்றன. அதை சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்குள் மூச்சடக்க அமிழ்த்திவிடுகிறோம்...  ஆண்கள் மட்டுமன்றி பெண்களும்  கூட  இந்த ஆணாதிக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். ”அந்தகாலத்தில் நாங்கள் இப்படியல்ல...என்னமா பேசுதுகள் இந்தக் காலத்துப் பொண்ணுங்க..” என்று அரம்பித்து...  ”பொம்பிளை சிரிச்சாப் போச்சு.. போயிலை(புகையிலை) விரிச்சா போச்சு..”  என்று முடிப்பார்கள். பாமர மக்களிடையே மட்டுமன்றி படித்த புத்தி ஜீவிகளும் கூட தம் பிள்ளைகளை முற்போக்காக வளர்க்கிறோம் என்பார்கள்... ஆனால் எங்கோ ஒரு இடத்தில் `பெண்` என்பதற்கு சமூகத்தால் எதிர்பார்க்கப்படும் வரைவிலக்கணத்தை எதிர்பார்க்கிறவர்களாகத் தான் இருக்கிறார்கள்... 
பெண்மை என்றால் ??...  
பெண்ணின் இயல்புகளைப் பெண்மை என்கிறார்கள்,அது போலவே ஆணின் இயல்புகளை ஆண்மை என்கிறார்கள். அதில் மென்மை, பெண்களின் பிரதான இயல்பாகவும், வீரம் ஆணின் இயல்பாகவும் சமூகத்தில் எதிபார்க்கப்படுகிறது. உளவியல் ரீதியாக இது சமூகத்தால் திணிக்கப்பட்டுவிடுகிறது. எப்படியெனில் ஒரு குழந்தை பிறந்ததும் அது தன் குடும்பத்தில், அல்லது சூழலில் எப்படி வளர்கிறது என்பதைப் பொறுத்து மென்மைத் தன்மையோ அல்லது வன்மைத்தன்மையோ அதற்குள் புகுந்து கொள்கிறது. இது இயற்கை எனினும் பெண் இந்த இயற்கையைப் பிற்காலத்தில் தன் அறிவுத் திறனுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப வெல்லவேண்டிய கடப்பாடு உடையவளாகிறாள். பெண்மையை மென்மையாகவே இலக்கியங்களில் படைக்கப்பட்டிருப்பதால் அதையே எம் சமூகம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றது. அதே வேளை, அதைப் பயன் படுத்தியே அவர்களைப் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் தள்ளிவிடுகிறது.
மென்மையாக உள்ள பெண்கள்  (மென்மையான ஆண்களும் கூட..) பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இதை பெற்றோர், சமூகத்தார் நன்கு அவதானிக்க வேண்டும். இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் கருத்து அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதல்ல. பிரச்சனைகளை எதிர்நோக்கும் போது சோர்ந்து போகாமலும், மன அழுத்தங்களுக்கு உள்ளாகாமலும் பாதுக்காப்பதே. முக்கியமாக அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள். அவர்கள் சமூகத்தின் சவால்களுகூடாகப் பயணிக்கும் போது வெறுமனே சாய்ந்து கொள்ளத் தோள் கொடுத்தால் போதும்.மற்றப்படி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தான் இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளவும் கற்றுக்கொடுக்கும்.
மென்மை எப்போதும் அழகானது தான். அது பெண்ணிடம் மட்டுமல்ல ஆணிடமும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவள் நான். இதற்கும் வீரத்துக்கும் முடிச்சுப் போடத் தேவை இல்லை என்பது எனது எண்ணம். பெண்மையின் வீரம் கூட மிகவும் அழகானது தான். அதை எமது ஈழத்தமிழரின் விடுதலைப்போர் வெளிப்படுத்தி நின்றது என்பது யாரும் மறக்க முடியாத உண்மை.  ஆனால் நாம் மென்மை என்ற போர்வையில் பயம், கோழைத்தனம், போன்ற எதிர்மறையான உணர்வுகளையும்,வீரம் என்ற போர்வையில் வன்மம், முரட்டுத்தனம் போன்றவற்றையும் திணித்து விடுகிறோம். இவை வரும் போது இயல்பாகவே இவர்கள் மென்மையானவர்களைக்  குறிவைத்துத் தாக்குபவர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களுக்குள்ள வக்கிர புத்தியால் மென்மையானவர்கள் துடிப்பதை இரசிக்கிறார்கள்.இதற்கெல்லாம் விதை சிறு வயதிலேயே பெற்றோர்களாலும் உறவுகளாலும் போடப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன்..
பெண் குழந்தை பெரியவர்களிடம் தன் கருத்தை சொல்ல முனையும் போது, அல்லது அதிக குறும்புத்தனம் செய்பவளாக இருக்கும் போது, பெண் பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக இரு என்று அவளை அடக்குவதும், பாடசாலையில் சக மாணவனிடம் இருந்து அடி வாங்கி அழுது கொண்டு வரும் பையனைப் பார்த்து, நீ ஆண்பிள்ளையா இப்படி அடிவாங்கிக் கொண்டு வாற .. திருப்பி அடிக்க வேண்டியது தானே என உசுப்பி விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்க.. நினைத்துப்பார்க்கும் போது கொஞ்சம் வினோதமாக்க் கூடத் தோன்றும். ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் போது பலர் அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த ஓடிப்போய்.. ”இந்த நிலமோ பிள்ளையை அடிச்சது??? அடி...அடி... இனி பிள்ளைக்கு அடிப்பியா? அடிப்பியா?” என்று நிலத்துக்கு உதைந்து அடித்த்தும் பிள்ளை சிரிக்கும்... எமக்குத் தெரியாமலே பிள்ளைக்குள் வன்முறையை வளர்க்கிறோம். இந்தப்பிள்ளை வளர்ந்து வரும் போது தன் சகோதரர்களோடு சண்டையிடும் போதும் தன் சகோதரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பான். இப்படியே அடுத்தவர் துன்பத்தைக் கண்டு சிரிக்கும் சமுதாயத்தை நாம் உருவாக்கி விடுகின்றோம். இதற்குப் பிறகு இயல்பிலேயே மென்மையாக இருக்கும் பெண்களைப்பற்றி சொல்லவா வேண்டும்...
சரி இந்த நிலையில் இருந்து எப்படி மீள்வது?
இதற்கான பல முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் சில நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்ந்தாலும், பலர் தவறான வழிகாட்டிகளாகவே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண்களின் கல்வி முன்னேற்றம்,தொழில் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கல்,கருத்துச்சுதந்திரம், சுய விருப்பு வெறுப்பு போன்ற பல விடயங்களிலே இந்தப் பெண்ணியவாதங்கள் முனைப்புறுத்தப்படுகின்றன. இவற்றோடு கல்வி கற்கும் சுதந்திரம், வேலை செய்யும் சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம் என்று படிப்படியாக பெண் சுதந்திரம் வழங்கப்பட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டே வருகின்றது.
ஆனாலும் இதையும் மீறி சில சந்தர்ப்பங்களில் முட்டாள்த்தனமான பெண்ணியவாதங்கள் மனதை நெருடுகின்றனவாக இருக்கின்றன. “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர் அந்த மாதர் அறிவைக் கெடுத்தார்” என்று பாடிய பாரதிக்கு,பிற்காலத்தில் பெண்ணியம் என்ற பெயரிலும் கூட பலர் மாதர் அறிவைக் கெடுப்பார்கள் என்று தெரியாதிருந்திருக்குமோ என்னவோ...
அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்கிறீர்களா? அதைத் தொடர்ந்து வரும் பதிவில் சொல்லுகிறேனே...
- என் பார்வை தொடரும்..

கடவுளும் தூதுவர்களும் - பீர்பால் கதைகள்!!!!

“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”
இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்
பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்"
சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல
வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார்.
அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.
பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார்.
அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு
கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது,
படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி
‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.
அதற்கு அக்பர் "குழந்தையைக் காப்பாற்றுவது
என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது
பெருமையா?" எனப் பதிலுக்கு கேட்டார்.
பீர்பால் அமைதியாக கூறினார், "சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது
போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்."
என்றார்