This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, November 5, 2013

சோதிடனைக் கொன்ற கதை(தெனாலிராமன் கதை)

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.
அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.
பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.
ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.
தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி.
"அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.
மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று.
அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.
"அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்."
தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.
சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.
"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"
"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.
"உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.
அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்

நீதிக் கதைகள் 03

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன.
அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால்
பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது.
அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.
அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது:
"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."
கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.
இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது.
பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது
செத்துப் போய்விட்டது.
நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

நீதிக் கதைகள் 02

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன்
குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து
அனுப்பியது சிங்கம்.
கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி
கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி
சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப்
போனது.
சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி
சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ
சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: :பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள்
குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி
விட்டேன்.
எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.
நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

நீதிக் கதைகள்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

ஏலம்


பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டார்.
அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.
மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.
மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.

பொறுமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில் முடியும்.

ஒரு யோசனை சொல்ல வேண்டும். காரியங்களை வேகமாகச் செய்வது எப்படி?”
“என்ன பிரச்னை? எதற்குக் கேட்கிறாய்?”
“எல்லா காரியங்களையும் வேகமாக செய்து முடிக்க நினைக்கிறேன். ஆனால் அப்படி முயலும்போது ஏதாவது தடங்கல் வந்துவிடுகிறது. என்ன செய்ய?”
அவன் சொன்ன பதிலிலிருந்து பிரச்னை என்னவென்று குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
’ஒரு காக்காவுக்கு தண்ணீர் தாகம் அதிகமாயிருந்தது. அங்கேயும் இங்கேயும் அலைந்து பார்த்தது. எங்கேயும் கண்களில் தண்ணீர் தட்டுப்படவில்லை. அப்போது ஒரு வீட்டு மொட்டை மாடியில் ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. உடனே அங்கே பறந்து சென்று தண்ணீர் குடிக்க முயன்றது. ஆனால் பாவம், அந்தக் குடுவையின் அடியில் தண்ணீர் இருந்ததால் காக்காவுக்கு எட்டவில்லை. என்ன செய்வதென்று காக்கா யோசித்தது.
அப்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. இதே போன்ற சூழலில் ஒரு புத்திசாலி காக்கா சிறு கற்களைக் கொண்டு வந்து குடுவையில் போட்டு நிரப்பி த ண்ணீரை மேலே கொண்டு வந்து குடித்தது காக்காவின் ஞாபகத்தில் இருந்தது. தானும் அதே போல் செய்ய நினைத்தது. பக்கத்தில் பார்த்தது. சிறு சிறு கற்கள் இருந்தன. அவற்றை கவ்வி எடுத்து வந்து குடுவைக்குள் போட்டது. நான்கைந்து கற்களைப் போட்டிருக்கும். தண்ணீர் அவ்வளவாக மேலே ஏறவில்லை. அதற்கு மேல் கற்களைப் போட காக்காவுக்கும் பொறுமை இல்லை.
இப்படி ஒவ்வொரு கல்லாக போட்டு எப்போது தண்ணீரை உயர்த்தி எப்போது குடிப்பது என்று கவலைப்பட்டது. வேகமாய் நீரை உயர்த்த அதற்கு ஒரு யோசனை தோன்றியது. சிறு சிறு கற்களாய் போட்டு நீரை உயர்த்துவதைவிட ஒரு பெரிய கல்லை கொண்டுவந்து போட்டால் சட்டென்று நீர் உயர்ந்துவிடுமே என்று நினைத்தது.
அருகிலிருந்த ஒரு பெரிய கல்லை கஷ்டப்பட்டு எடுத்து வந்து மேலிருந்து கண்ணாடிக் குடுவைக்குள் போட்டது. அந்தக் கல் பட்டதும் குடுவை உடைந்தது. தண்ணீர் சிதறி யாருக்கும் பயன்படாமல் ஓடியது’
இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டால் என்னவாகும் என்பது வந்தவனுக்குப் புரிந்தது. அப்போது குரு அவனுக்குச் சொன்ன
WIN மொழி:
பொறுமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில் முடியும்.

பாகப்பிரிவினை


விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.
இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.
அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.
உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.
அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?

இரை

இன்றைய விடியலில் வானம் சற்றுத் தெளிவாய் இருப்பதுபோலத் தோன்றியது. பூமியைக் குளிரவைத்து திருப்திப் பட்டதோ என்னவோ கொட்டும் மழை நின்று மெல்லிய தூறல்கள் மட்டும் ஆங்காங்கே நனைந்துபோன பூமி குளிர்காயவென சூரியன் முகிற்போர்வையை விலக்கத் தொடங்கியிருந்தது. நான் மெதுவாக எனது வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கின்றேன்.
வானமும் பூமியும் புதிதாகப் பிறந்ததுபோல் இருந்தது. நான் வாழும் இந்த வனாந்தரம் அழுக்குகள் நீங்கக் குளித்திருந்தது. 'ஓ என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே. நான்தான் நாதன்' பாம்புகள் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த நான்கு நாட்களாகப் பெய்த அடைமழை என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. இப்போது பசி என் வயிற்றைக் கிள்ளுகின்றது. மழை மறுபடி தொடங்குமோ, என்னவோ நான் அதற்கிடையில் என் வயிற்றை நிரப்பியாக வேண்டும். என் புற்றிலிருந்து வெளியே வருகின்றேன். அப்பப்பா, இந்தத் தரை எப்படி ஜில்லென்றிருக்கிறது! குளிர்ந்த காற்று என் முகத்தில் உரச, என்னைப் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளுகின்றது. விரைவாக ஊர்ந்து என் இரையைத் தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன்.
இளங்காலை சூரியன் மெதுவாக என் இமைகளைத் தட்டியபோதுதான் விடிந்தது எனக்குப் புரிந்தது. அடடே இன்று வானம் சற்று வெளிறி இருக்கிறதே. நான் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்துக்கொள்கின்றேன். ஒருதடவை என் உடம்பை உலுப்பி உதறும்போது உரோமங்கள் சில்லிட்டு மீண்டும் அடங்குகின்றது. ஒட்டிப்போன எனது வயிற்றைப் பார்க்கிறேன். சே. சரியாகச் சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது. எப்படியும் வயிற்றை நிரப்பியாகவேண்டும். நான் வழக்கமாகச் சாப்பிடும் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறேன். ம் கூம் யாரையும் அங்கு காணவில்லை. மெதுவாகக் குரலை உயர்த்தி 'வள் வள்.' என சத்தமிடுகிறேன். இனி யாராவது சாப்பிட வந்து அவர்கள் போடும் எச்சில் இலை விழும்வரை என் வயிற்றுக்குப் பொறுமையில்லை. ஊர்மனைக்குச் செல்வோம் எனத் தீர்மானித்தபடி செல்கிறேன். என்னைப்பற்றிய விபரத்திலிருந்து என்னைப் புரிந்துகொள்வீர்கள்தானே.
ம்.. ஆம்.. ஆ எனது கடைசிக் குழந்தையின் வீரிட்டு அழுத குரல்கேட்டு விழித்து எழுகிறேன். என்னருகில் வாடிய முகத்துடன் என் மனைவி. அவள் மடியில் எனது கடைக்குட்டி. அவனது அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள் அவள். பாவம் அவளுடைய சமாதானம் ஒன்றும் எடுபடவில்லை. பசியால் அழும் குழந்தைக்கு என்ன சமாதானம் சொன்னால் கேட்கும்? அவள் இயலாமையுடன் என்னைப்பார்க்க கசிந்த என் கண்களை வேறு ஓர் பக்கம் திருப்பிக்கொள்கிறேன். எனது ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் குளிருக்கு அடக்கமாக, பழைய சேலையைப் போர்த்தி அதே பாயில் சுருண்டிருந்தார்கள். தூங்கும் அவர்களது முகத்திலும் அப்பட்டமாகப் பசிக்களை. சொந்த மண்ணைவிட்டு நீங்கிய கணத்திலிருந்து பசிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இந்தப் பிஞ்சுகள். சோர்வுடன் எழுந்து நிற்கிறேன். எனது உடம்பிலும் தளர்ச்சி, முற்றத்திலிருந்த பானையிலிருந்து நீரைமொண்டு எனது முகத்தை அலம்பிக் கொள்கிறேன். உள்ளே வந்து மேற்சட்டை போட்டுக்கொண்டு எனது விறகு கட்டும் சைக்கிளை எடுக்கிறேன். 'கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கு இதற்கிடையில் போய் ஏதேனும் விறகு கட்டி வித்திட்டு வாறன் என்ன' என்று கூறி மனைவியிடம் விடைபெறுகிறேன். அவள் என் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே 'கவனம் நீங்களும் இரண்டு நாளாய் வடிவாய் சாப்பிடேல' என்றாள். அவள் குரல் கம்மியது, விழியில் நீர் திரையிட்டது. 'அட நாங்கள் அனுபவிக்காததே, நீ கவலைப்படாதே' அவளைச் சமாதானப்படுத்திவிட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.
நானும் ஊர்ந்து ஊர்ந்து இரைக்காக அலைந்து களைத்துவிட்டேன். ம். ஒரு சிறு புழுக்கூட என் கண்களில் அகப்படவில்லை. பசியால் என் கண்கள் பஞ்சடைகின்றது. இனி ஏதாவது இரை என்னைத்தேடி வரும்வரை இந்த மரத்தில் இருந்தபடியே ஒரு குட்டித்தூக்கம் போடுவோம் என்று நினைத்தபடியே பாதையோரமாக உள்ள இந்த மரத்தில் படுத்திருக்கிறேன். தூக்கமும்வரவில்லை. என் பாம்புச் செவியை நீட்டியபடியே ஒரு இரையின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
ஊர்மனையாவும் குளிரிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக இப்போதுதான் மனிதத் தலைகள் தெரிகின்றது. எந்த வீட்டிலிருந்தாவது புகைவராதா என்று ஏக்கத்துடன் அலைகிறேன். கடவுளே என் வயிறு கொதித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், என் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்தும் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன், இடையிடையே குலைத்தவாறு.
என்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை, என்றுமில்லாதவாறு ஒரு பலவீனம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இருப்பினும் பசியால் வாடும் என் குழந்தைகளின் முகமே என் சிந்தையில் இருந்தபடியால் எனது சோர்வைப் பொருட்படுத்தாது விரைகிறேன். பின்னாலுள்ள கத்தி, கோடரி, கயிறு என்பன இப்போது எனக்குப் பலத்த சுமையாக இருக்கிறது. கடவுளே! எப்படித்தான் விறகு கட்டப்போகிறேனோலு} ஒருவாறு காட்டை அடைந்துவிட்டேன். சைக்கிளைவிட்டு இறங்கி காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறேன். பாதையோரமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு காய்ந்த மரம் என் கண்களில் படுகிறது. அதனருகே சென்று வெட்டத் தொடங்குகிறேன். காய்ந்த மரம்தான் இருப்பினும் தண்ணீர் ஊறி இருப்பதால் வெட்டக் கஸ்டப்படுகிறேன். இப்போதைக்கு இது போதும் வெட்டிய விறகுக் கட்டைகளை சைக்கிளில் ஏற்றிக் கட்டுகிறேன். சுமையுடன் சைக்கிளை உருட்டுவது மிகக் கஸ்டமாக இருக்கிறது. என் உடலிலிருந்து இந்தக் குளிரிலும் வியர்வை ஆறாகப்பெருக்கெடுக்கிறது. ஆழமான மூச்சுகள் எடுத்தவாறே வீதிக்கு வருகிறேன். மனதில் ஒரு திருப்தி மெதுவாக வீதியில் சைக்கிளை மிதிக்கிறேன்.
உர்.. ஊ ல். அட கடவுளே! வானத்தில் ஒரு பெரிய இயந்திரக் கழுகு சுற்றத் தொடங்கியிருந்தது. எனக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வேதனையாகவும் இருந்தது. மழைவிட்ட சிறிது நேரத்தில்கூட வந்துவிட்டானே பாவி என்று மனதிற்குள் சபித்தவாறே சைக்கிளை பாதையோரமாக இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் தேடி விரைகிறேன்.
இரைக்காக நான் காத்திருந்தபோது, விண்ணில் ஒரு சத்தம். அட மனிதர்களைக் கொல்லும் இயந்திரக் கழுகு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. ஒரு விறகு வெட்டி பயத்துடனே தனது சைக்கிளை நான் இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் நோக்கி விரைய, நான் அலுப்புடன் கண்களை நாலாபுறமும் சுழற்றியபோது அது எனது கண்களில் படுகிறது. அட, எனக்குச் சற்று அதிஸ்டம் இருக்கிறது போலிருக்கிறதோ! விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சைக்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன? ஆவலுடன் விறகுக்கட்டில் புகுந்து ஆவலுடன் அவற்றை வேட்டையாடத் தொடங்குகிறேன்.
எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உடல் தளர்ந்து கண்கள் இருட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் இப்போது திட்டுத்திட்டாக நீலம். பறவைகள் ஆரவாரித்தபடியே பறந்து கொண்டிருந்தது. பூக்கள் எல்லாம் குளித்து முடிந்து காற்றில் தலை துவட்டிக்கொண்டிருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. வயிற்றுக்கு விருந்து இல்லாதபோது புலனுக்கு விருந்து இருந்தென்ன? விட்டென்ன? தெருவில் மூலையில் கிடக்கும் குப்பை மேடுகளை ஆராய்ந்தபடியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.
அப்பாடா எனக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. மிகத்தூரத்தில் எங்கோ குண்டுகளை உமிழ்ந்துவிட்டு அந்த விண் அரக்கன் போய்விட்டான். நான் எனது மறைவிடத்தைவிட்டு வெளியே வருகிறேன். மீண்டும் எனது குழந்தைகளின் முகம் என் நினைவில் வரவே, புதுவேகத்துடன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்குகின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் விறகுச் சிராய் போலும் என் முதுகில் குத்தியது. சீ. என்ன இது என்று முதுகை நெளித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன். சிறிது தூரம் பயணித்த பின்னர் மீண்டும் அதே சிராய் குத்தியது. எனக்கு எரிச்சலாக வந்தது. நான் சைக்கிளைச் சாத்திவிட்டு, மறைவிடத்தில் ஒதுங்கியபோது கட்டுத் தளர்ந்துவிட்டது போலும் திரும்பவும் நிறுத்தி இறுக்கிக் கட்டலாம் என்று யோசித்தேன்.
இன்னும் கொஞ்சத்தூரம்தானே அதற் கிடையில் என்ன நடந்துவிடப்போகிறது என்று தொடர்ந்தும் போய்க்கொண்டு இருக்கிறேன். சற்றைக்கெல்லாம் அதே சிராய் மீண்டும் சற்று வேகத்துடன் குத்தியது. சரி இனியும் தாங்காது இறங்கி யோசித்தபோது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெண் என்னைக் கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஒருவாறு சமாளித்தபடியே சைக்கிளை அவளருகே கொண்டு செல்கிறேன். என்ன விலை என்று விறகைப் பார்த்துக் கேட்கிறாள். எழுபத்தைந்து ரூபாய் என்றேன். ஐம்பது ரூபாய்தான் தருவேன் சரியா எனக் கேட்டாள். நான் இப்போது அவளுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. அத்துடன், இந்த மழைநேரம் அதிக தூரம் போகவும் முடியாது; சரி என்று சொல்லிவிட்டு விறகைப் பறித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டேன்.
அப்பாடா. இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது. நான் தவளை வேட்டை நடத்தி முடிக்கும் கணத்தில் அந்த விறகுவெட்டி மீண்டும் சைக்களை எடுத்து ஓடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் விறகுக்கட்டின்மேலும் கீழுமாக ஓடித்திரிந்தேன். எனக்கு உடனடியாக கீழே இறங்கவேண்டும் போல் இருந்தது. வயிறு நிரம்பியிருந்ததால் மேலிருந்து கீழே குதிக்கவும் விரும்பவில்லை. அந்த விறகுவெட்டி சைக்கிளை நிறுத்துவான் எனக் காத்திருந்தேன். ம் கூம் அவன் நிறுத்தவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. மெதுவாக என் நாக்கால் அவனைத் தீண்டினேன். ஆனால், அவனோ என்னை சட்டை செய்யாது தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தான். இது என் கோபத்தை அதிகரித்தது. எனவே மீண்டும் சற்று தீண்டினேன். அவன் இந்த முறை மெதுவாக திரும்பிப் பார்த்துவிட்டு ஒருகையால் சரிந்திருந்த விறகுக்கட்டை சரிசெய்துவிட்டு, மீண்டும் ஏதோ வெறிபிடித்தவன் போல் ஓடத்தொடங்கினான். என்கோபம் உச்சத்திற்கு ஏறியது. எனது பலமெல்லாம் திரட்டி வேகமாக தீண்டினேன். இந்தமுறை அவன் இறங்க உத்தேசித்திருக்க வேண்டும். சைக்கிளின் வேகத்தை குறைத்தான். ஆனால், அதேநேரம் ஒரு பெண் அவனை மறித்ததால் அவ விடம் சென்றபின்னரேயே நிறுத்தினான். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். அப்பாடா சைக்கிள் ஒருமாதிரி நின்றது. அவன் அந்தப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தபோதே நான் வேகமாக நழுவி விடுகிறேன்.
நாய் அலைச்சல் என்று இதைத்தான் சொல்வார்களோ..! இதுபோல எந்த ஒரு நாளும் நான் அலைந்ததில்லை. என் கால்கள் நிற்கச் சொல்லிக் கெஞ்சியது. என் வயிறு ஓடச்சொல்லி மன்றாடியது. நான் இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு இருந்தேன். நான் தளர்ந்துபோய் அலைந்து கொண்டு இருந்தேன். அட அப்போதுதான் அது என் கண்களில் பட்டது. பாதையோரமாக விழுந்து கிடந்தது. ஆம் அது ஒரு பாண்பொதி ஆவலுடன் அதைத் தின்று என் வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன். வயிறு நிரம்பிய களிப்பில் நான் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.
அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிகவேகமாக விரைகிறேன். எனக்கு இப்போது நன்றாகத் தலை சுற்றியது. புதுத் தளர்ச்சி என் உடலில் எங்கும் வேகமாகப் பரவியது. ஒரு கடையில் நிறுத்தி பாண் வாங்கிக்கொள்கிறேன். என் கண்மணிகளின் பசியால் வாடிய முகம் வரவர என் நினைவை கூடுதலாக வியாபிக்கத் தொடங்கியது. ஐயோ இது என்ன என்னால் எதையும் பார்க்கமுடியவில்லையே. கண்கள் இருண்டுவிட்டது. உடல் மிகவும் தளர்ந்து போகிறது. கடவுளே என் சைக்கிள் என் கையைவிட்டு நழுவி எங்கோ விழுகிறது. நான் தூக்கி எறியப்படுவது மட்டும் எனக்கு இப்போது புரிந்தது. வெளி ஒலிகள் ஏதும் எனக்கு இப்போது கேட்கவில்லை. நான் எங்கோ இருட்டான பாழும் கிணற்றில் மிக ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். ஐயோ கடவுளே! என் குழந்தைகளின் பசியை எப்படித் தீர்ப்பேன் என் குழந்தைகளினதும், மனைவியினதும் பசியால் வாடிய முகங்கள் எனது நினைவில் இறுதியாக மங்கலாகத் தெரிந்தது. என் கடைக்குட்டி வீரிட்டு அழும் ஒலி என் காதில் கடைசியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

தன்னம்பிக்கைக்கு மறுபெயர்.

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.
தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்.

மன்னிக்க முடியாத கோபம்

மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.
எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒருவன் 'பத்து' என்றான்; அடுத்தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.
இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார். மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்,தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.