This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, December 14, 2013

பயம்! பயம்! பயம்!

பயம்! பயம்! பயம்!
--------------------------
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார்.
என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான்.
உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.
உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

நாற்றம்

நாற்றம்
*************
முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.
உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.
முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.
மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.'
'அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?
நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.
அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக்
கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''

விடுதி

விடுதி
************
மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.''சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,''என்றார் அவர்.
மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,''குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?''குரு கேட்டார்,''மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?''மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.
அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,''உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?''என்று கேட்டார்.மன்னனும்,''அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,''என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,''உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?''அரசன் சொன்னான்,''என் மகன்,அதன் பின் என் பேரன்.''குரு,''ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.
பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.
யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?''என்று கேட்டார்.

மரணம்

மரணம்
*********
ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.
ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?''ஞானி சொன்னார்,''பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.
என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.
இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின.
இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?''

பணிவு

பணிவு
***********
அசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.
அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.
மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.
ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.
இப்போது அசோகா மன்னர் சொன்னார்,''தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது?இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.
அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?''தளபதிக்கு இப்போது புரிந்தது.

அழகும் பலனும்

அழகும் பலனும்
**********************
புல் வெளி.
அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது,
''இந்த அந்தி நேர மேகம் தான் எத்தனை அழகு!தகதகவென தங்க நிறத்தோடு.அந்த அழுக்கு மேகத்தைத்தான் பிடிக்கவில்ல.கன்னங்க ரேல்என்று.''
அம்மாப்புல் அமைதி காத்தது.
தகித்தது புல்வெளி.
சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது.நா உலர்ந்தது.
உயிர் மெல்ல மெல்ல வறண்டது.
அதே நேரத்தில்,
அழுக்கு மேகம் இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது.
புல்வெளி எங்கும் பூரிப்பு.
அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது:
''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக் கொண்டது,பார்த்தாயா?
அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய
அவசியமில்லை.பயனுள்ளவை எல்லாம்
அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.'

விடாமுயற்சி

விடாமுயற்சி
*********************
கடலோரம்.
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள்.
முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
''உனக்கு என்ன தெரிகிறது?''
'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.'
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல்
உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.'
குரு சொன்னார்,
''சில நேரங்களில் அலைகளாய் இரு;
சில நேரங்களில் கரையாய் இரு.''

மாற்றம்

மாற்றம்
*************
ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?''
ஆந்தை: கீழ் திசை நோக்கி .
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.
அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய்.

வித்தியாசம்

வித்தியாசம்
*******************
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து போன்றது.
இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.
மற்றொன்று உதைக்கப் படுகின்றது.தான் வாங்கிய காற்றை
சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால்
அது முத்தமிடப் படுகிறது.சுயநலம் உள்ள மனிதன்
புறக்கனிக்கப்படுவான்பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.

பசுவின் புகழ்

பன்றி,பசுவிடம் தன ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன்.இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .''
பசு கூறியது,''நீ கூறுவது உண்மையே.அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''