This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, October 15, 2013

மாணவன் joke

மாணவன் மாயா : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."
மாணவன் போயா : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் மாயா கொடுத்துட்டு வந்தேன்..."
மாணவன் மாயா : "அடப்பாவி..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"

குட்டி சர்தார்ஜியின் வேண்டுதல்

சர்தார்ஜியின் மகன்:- கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமா மாத்திரு...

அப்பா சர்தார்ஜி:- ஏண்டா அப்படி வேண்டுறே?

சர்தார்ஜியின் மகன்:- ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்.

வக்கீலும் டாக்டரும்

வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!

டாக்டர்: இல்லை

வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.

வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?

டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு.

மனம் என்றுமே ஒரு சிறு குழந்தை தான். அதில் எதிர்பார்ப்புகள் அதிகம். ஏமாற்றங்களும் அதிகம். நினைத்தது நடக்காத பட்சத்தில் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு வினோத குழந்தை அது. அந்தக் குழந்தை உறங்கி விட்டதால் தானும் நிம்மதியோடு உறங்கிக்கொண்டிருந்தான் வசந்தன். உறக்கத்தில் மட்டுமே ஒருவன் நிம்மதியாக இருக்க முடியும். அதில் தூய்மையும் கலந்திருக்கும்.



நதியின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வசந்தனை ஒரு பெண்ணின் கொலுசு எழுப்பிய ஒலி எழுப்பியது. தன் கண்களைத் திறந்து பட்டாம்பூச்சி போல இமைகளைச் சிறகடித்து யாரென்று பார்த்தான். ஷோபனா நின்றுகொண்டிருந்தாள். முந்தின நாள் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு நினைவில் வந்தன.



"மன்னிக்கவும்! சிறிது களைப்பு. உறங்கிவிட்டேன்" என்று படபடப்போடு எழுந்தான்.



"வெகு தூரம் நடந்தால் களைப்பு வரத்தானே செய்யும்" என்றாள் ஷோபனா.



அதற்கு ஒரு சிறு சிரிப்பை மட்டும் விடையாக்கினான் வசந்தன். அவன் கண்கள் அவள் மீதும் அவள் கைகளில் இருந்த குழந்தையின் மீதும் மேய்ந்தன. பிறகு, கண்கள் வானை நோக்கின. கரும்புயல் மறைந்திருந்தது. வானில் ஒரு தெளிவு பிறந்து நட்சத்திரங்கள் மலர்களைப் போல் பூத்துக் குலுங்கி கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.



"புயல் ஓய்ந்துவிட்டதா?" என்றான் அவன். அதில் சிறிது வருத்தமும் கலந்திருந்தது. காரணம், ஷோபனா இப்பொழுது பிரியப்போகிறாள் என்ற உண்மை.



"ஆம்! நான் கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. நேற்று நீங்கள் எனக்குச் செய்த உதவிக்கு எனது நன்றி"



அவள் கூறிய நன்றி வசந்தனுக்குக் கசப்பாக இருந்தது. இருந்தும் பொறுத்துக்கொண்டான்.



"மீண்டும் எப்பொழுது சந்திக்கலாம்?" என்றான்.



அதற்கு அவள் புன்முறுவலோடு, "சந்திக்கலாம்" என்றாள்.



அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் விழித்தான் வசந்தன்.



நெடுந்தூரம் பரவியிருந்த மரங்கள்; செடி கொடிகள்; எல்லாமே மறையத் துவங்கின. பரப்பளவு குறுகி குறுகி மறைந்துவிட்டது. மாய நீர்க்குமிழித்திரை மட்டுமே மீதம் இருந்தது. வசந்தன், மாயப் பதக்கத்தை நோக்கினான். அவன் எண்ணங்களைப் புரிந்துகொண்ட அது மாயத்திரையை விலக்கியது.



ஷோபனா குழந்தையைச் சுமந்துகொண்டு நடந்தாள். அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் அவளின் மீதிருந்து பார்வையை விலக்கவில்லை. ஷோபனாவின் தோளின் மேல் தன் தலையைச் சாய்த்துக்கொண்டிருந்த குழந்தை வசந்தனைப் பார்த்துப் புன்னகைத்தது. அவனும் புன்னகைத்து கையசைத்தான். ஒரு மஞ்சள் நிற ஒளி ஷோபனாவின் மீது சூழ்ந்து அவளை மறையவைத்தது.



ஷோபனா மாயமாய் மறைந்ததை இமைகொட்டாமல் நோக்கிக்கொண்டிருந்த வசந்தன், இது போன்ற ஓர் அரிய வாய்ப்பு மீண்டும் கிட்டுமா? என்ற ஒரு கேள்விக்குறியோடு தன் நடையை ராஜீவின் வீட்டுப் பக்கம் திருப்பினான். அப்பொழுது தான் ராஜீவைப் பற்றிய நினைவு அவனுக்கு வந்தது. ராஜீவ் எங்கு போனான்? எங்கு போய் அவனைத் தேடுவது? என்று சிந்தித்தபடியே நடந்தான்.



சரி ஒரு குரல் கொடுத்துப் பார்ப்போமே என்று எண்ணி, "ராஜீவ்வ்வ்..." என்று கூக்குரலிட்டான். ராஜீவ் வரவில்லை. வசந்தன் சிறிது கலக்கம் அடைந்தான். கண்டிப்பாக அவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வீட்டை நோக்கிச் சென்றான்.



*** *** ***



சிறிது நேரத்தில் வீட்டையடைந்து கதவை லேசாகத் திறந்தான். உள்ளே கண்ட காட்சி அவனை நிம்மதியடையவைத்தது.



ராஜீவ் மேஜையின் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஆவி பறக்க சூப்பை ருசித்துக்கொண்டிருந்தான்.



வாசலில் அரவம் கேட்டதும் ராஜீவ், சுவைப்பதை நிறுத்தி யாரென்று பார்த்தான். வசந்தனைக் கண்டதும் குடுவையைக் கீழே வைத்துவிட்டு நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி ஓடி வந்தான்.



"நண்பா! உனக்கு என்ன ஆனதோ? என்று பதறிவிட்டேன். புயல்காற்றில் சிக்கிவிட்டாயோ? என்று கூட எண்ணிவிட்டேன். இது வரை எங்கு மறைந்திருந்தாய்? எப்படித் தப்பித்தாய்?" என்று அடுக்கடுக்காகப் பல கேள்விகளை எழுப்பினான்.



"அது இருக்கட்டும். நீ எப்படி இங்கு வந்தாய்? அதை முதலில் சொல்" என்றான் வசந்தன்.



ராஜீவ், "அந்த மாயப்பதக்கம் நாம் நினைப்பதை நிறைவேற்றக்கூடியது. நாம் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கு நொடிப்பொழுதில் கொண்டு செல்கிறது. வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். உடனே, இங்கே தூக்கி வந்துவிட்டது" என்று தொடர்ந்துகொண்டே "சொல்! நீ எப்படித் தப்பித்தாய்?" என்றான்.



"உன்னைக் காப்பாற்றியது போல் என்னையும் இந்த மாயப்பதக்கம் தான் காப்பாற்றியது"



"நல்லது. முதலில் இந்த சூப்பைக் குடி. இன்று உன்னை ஒரு முக்கிய இடத்திற்கு அழைத்து செல்லப்போகிறேன்"



"எங்கு?"



"நான் வேலை செய்யும் இடத்திற்கு. அங்கு உனக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுக்கப்போகிறேன்"



"உண்மையாகவா? நன்றி நண்பா!"



"உடனே நன்றி சொல்லிவிடாதே!" என்று வசந்தனின் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை நிறுத்தினான் ராஜீவ்.



"அந்த வேலை கிடைப்பது சாதாரணமானதன்று. இன்னும் சில நாழிகைகளில் அதை நீ புரிந்துகொள்வாய்"



"பலத்த பீடிகை போல் அல்லவா தெரிகிறது. உன் வேலை பற்றிக் கூறவே இல்லையே"



"மெமோரியல் உலகத்தில் வேலை செய்யும் பணியாட்களை மரக்கலத்தில் ஏற்றிச் சென்று விடுவது தான் என் வேலை. இந்த வேலை உனக்குக் கிடைத்துவிட்டால் அங்கு வேலை செய்யும் பணியாட்களோடு பழக்கங்கள் ஏற்படும். உனக்கும் உதவியாக இருக்கும்"



வசந்தன் வேலையே கிடைத்துவிட்டது போல் ஓர் கற்பனை செய்து அதில் மிதந்தான்.



"உடனே மகிழ்ச்சி அடையாதே. இந்த வேலை எளிதில் கிட்டாது. ஆபத்தான பரிட்சைகள் நிறைந்திருக்கும்"



ராஜீவ் எச்சரித்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கற்பனையிலே தவழ்ந்திருந்தான் வசந்தன்.



சிறிது நேரத்தில் இருவரும் வெளியே கிளம்பினார்கள். குளிர் காற்றில் நடந்து மறைந்தனர்.



*** *** ***



மெமோரியல் உலகிற்குச் செல்லும் மரக்கலங்கள் கடலில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதில் பணியாட்கள் நிரம்பி, செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.



அதில் ஒரு மரக்கலத்தில் செல்வம் அமர்ந்துகொண்டு, நிரம்பியிருக்கும் மரக்கலங்களை வெறித்தார். அவருடைய மரக்கலத்தைச் செலுத்துபவன் மட்டும் இன்னும் வரவில்லை என்கின்ற எரிச்சல் அவரின் கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த மரக்கலம் வேறு யாருடையதும் அல்ல ராஜீவினுடையது தான்.



நீண்ட பெருத்த கடல் தன் அலைக்கரங்களால் மரக்கலங்களைத் தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அலை மரக்கலங்களில் பட்டுத் தெறித்து பன்னீர்த் துளிகளாய் அவரின் முகத்தில் அடித்தது.



நிறைந்த இருள்; அதில் ஒளிரும் மீன்கள்; கரையில் மரங்கள்; கடலை ரசித்தபடி பறக்கும் எண்ணற்ற பறவைகள்; கடற்காற்றின் தீண்டுதல்; இவை எதையும் ரசிக்கமுடியாதவராய் இருந்தார் செல்வம்.



"எங்கே போனான் இந்தப் பாதகன்" என்று உறுமினார்.



மற்ற மரக்கலங்கள் மெதுவாகக் கடலினுள் ஆடியபடி சென்றன. அதில் மனிதச் சலசலப்புகள் தொடர்ந்தபடி இருந்தன. பருத்த அலைகள் மரக்கலங்களைச் சாய்க்க கங்கணம் கட்டி மோதியது. ஆனால், மரக்கலங்கள் வளைந்துகொடுத்து தங்கள் வழியில் முன்னேறிக்கொண்டிருந்தன.



செல்வம் இருந்த மரக்கலம் மட்டும் அனாதையாக நின்றுகொண்டிருந்தது. மேலே இருக்கும் நிலவையும் விண்மீன்களையும் நோக்கி நேரத்தைக் கடினமாகப் போக்கிக்கொண்டிருந்தார்.



வசந்தனும் ராஜீவும், கரையோரம் இருக்கும் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு

இதையெல்லாம் கண்காணித்துக்கொண்டிருந்தனர்.



"எதற்கு இங்கே நிற்கிறோம்?" என்றான் வசந்தன்.



"காரணம் இருக்கிறது. அதோ மரக்கலத்தில் அமர்ந்திருக்கிறாரே அவர் தான் மெமோரியல் உலகின் போக்குவரத்திற்கு பொறுப்பு. அவர் நினைத்தால் உனக்கு வேலை வழங்கலாம்"



"அப்படியா? அப்படியென்றால் வா! நாம் வேலை கேட்கலாம்"



"முட்டாள்! நான் சொல்வதை முதலில் கேள். ஏன், எதற்கெடுத்தாலும் அறிவீனமாக முந்துகிறாய்? முதலில் நான் அங்கு செல்கிறேன். இரண்டு நிமிடங்கள் மரக்கலத்தை நகர்த்தாமல் தாமதம் செய்கிறேன். பிறகு நீ வா. அந்தச் சமயத்தில் உன்னைச் சந்திக்கவைத்தால் நன்றாக இருக்கும்"



"சரி" என்றான் வசந்தன்.



ராஜீவ் அங்கிருந்து பூனை போல் நழுவி மரக்கலம் நிறுத்திவைக்கப்படிருக்கும் இடத்திற்கு வந்தான்.



செல்வம் ராஜீவை எரித்துவிடுவதைப் போல் முறைத்தார்.



அவர் திட்டுவதற்கு வாயைத் திறப்பதற்கு முன்னமே ராஜீவ் முந்திக்கொண்டான்.



"ஐயா! மன்னிக்கவும்...மன்னிக்கவும்...தங்களைக் காக்கவைத்து பெரும்பாவத்தைச் சம்பாதித்துவிட்டேன். நேற்று நீங்கள் கண்டிருப்பீர்களே பெரும்சூறாவளி, அதில்

சிக்கிக்கொண்டுவிட்டேன். அதிலிருந்து தப்பிக்க பெரும்பாடுபட்டதால் அசந்து தூங்கிவிட்டேன்" என்று பொய்யான கவலையை முகத்தில் பூசி கண்களில் சிறு குறும்பு மிளிரும்படி கூறினான்.



செல்வத்தின் கூர்மையான கண்கள் ராஜீவின் முகத்தில் ஊடுருவியது. வீணாக நேரத்தைக் கடத்தாமல் செல்லவேண்டுமே என்கிற எண்ணத்தில், "சரி சீக்கிரம் மரக்கலத்தைத் செலுத்து" என்றார்.



ராஜீவ், "உத்தரவு" என்று குழைந்தபடியே படகைச் சுற்றிச் சுற்றி எதையோ செய்துகொண்டிருந்தான்.



என்ன செய்கிறான்? என்று விழித்தார் செல்வம். "என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று உறுமினார்..



"மன்னிக்கவும். இதோ! இதோ! இப்பொழுது புறப்படுவோம்" என்று பட படப்போடு இருந்த சமயத்தில் சரியாக நுழைந்தான் வசந்தன்.



வசந்தனைக் கண்டதும் நிம்மதி அடைந்த ராஜீவ், "வசந்தா! இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்றான்.



"உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்"



"நலமாக இருக்கிறாயா?"



வசந்தன் தலை ஆட்டினான்.



"ராஜீவ்! இப்பொழுது கிளம்பப்போகிறோமா? இல்லையா?" என்று நெருப்பு கனலைக் கண்களில் கொண்டு வந்து கத்தினார் செல்வம்.



"ஐயா! மீண்டும் அடியேனை மன்னிக்கவும். இவன் எனது நண்பன். உங்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கிறேன். வசந்தா! இவர் தான் என்னுடைய எஜமானர்"



வசந்தன் அவரைப் பார்த்துப் புன்னகைத்தான். நதிகள் கழுவிய கூழாங்கற்கள் போன்ற வசந்தனின் கண்களை நேருக்கு நேர் நோக்கினார் செல்வம். எல்லா விஷயமும் புரிந்து போனது. சலனமற்ற முகத்திற்குத் தாவினார்.



"ஐயா! உங்களிடம் ஓர் உதவி பெறவே உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டேன்" என்று பேச்சைத் துவங்கினான் வசந்தன்.



என்ன உதவி என்ற பார்வையை வீசினார் செல்வம்.



"எனக்கு இங்கு பணிபுரிய வேண்டும் என்ற அவா. அதற்கு உங்களின் தயவு எனக்கு வேண்டும்"



"அவ்வளவு தானே? கொடுத்துவிட்டால் போகிறது" என்று புரியாத சிரிப்பை உதிர்த்தார்.



வசந்தன் விழித்தான். அதற்குள் வேலை கிடைத்துவிடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.



மரக்கலத்திலிருந்து எழுந்தார் செல்வம்.



"ராஜீவ், நாளையிலிருந்து உனக்கு இரு வாரங்கள் வேலை செய்யத் தடை" என்றார்.



"ஐயா! நான் என்ன பாவம் செய்தேன்" என்று அதிர்ந்தான் ராஜீவ்.



"என்னைக் காக்க வைத்ததற்காக. வேண்டுமென்றே தாமதம் செய்து என்னை ஏமாற்றியதற்காக" என்று கூறி மரக்கலத்திலிருந்து மறைந்து நொடிப்பொழுதில் கரையில் தோன்றினார் செல்வம்.



வசந்தனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.



வசந்தனை நோக்கி, "தம்பி, வேலை கொடுக்கும் பொறுப்பு என்னுடையதல்ல. அது யாருக்கும் கிடையாது. வேலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கும்" என்றார்.



"புரியவில்லை ஐயா!"



"இது ஒரு பரீட்சை தம்பி. இந்தக் கடலை ஒரு முறை நன்றாகப் பார். உன் மனதில் என்ன தோன்றுகிறது?"



"அழகாக இருக்கிறது. ரசித்துக்கொண்டே இருக்கலாம். அலைகளோடு விளையாடத் தோன்றுகிறது. நெடுந்தூரம் நீந்தத் தோன்றுகிறது" என்று மனதில் தோன்றியதைச் சட்டெனக் கூறினான் வசந்தன்.



"உண்மை தான். மேல்புறம் அழகாக இருந்தாலும் உள்ளே அழிவை விளைவிக்கும் விஷயம் இருக்கிறது. இங்கே வேலை தேட வந்து, கொடுக்கின்ற பரிட்சையில் இறங்கி,தோல்வியுற்றவர்கள் மரணித்து துஷ்ட ஆத்மாக்களாக உலவிக்கொண்டிருக்கிறார்கள்"



வசந்தன் பயக்கண்களோடு கடலை வெறித்தான். உள்ளே எண்ணற்ற துஷ்ட ஆத்மாக்கள் நீந்திக்கொண்டிருந்ததை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.



"இப்பொழுது சொல். பரிட்சையை ஏற்றுக்கொள்கிறாயா? அல்லது கொடுத்த விவரங்களோடு இங்கிருந்து செல்கிறாயா?" என்றார்.



வசந்தன் ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்று இருமனதோடு தவித்தான்.



"நேரத்தை விரயம் செய்யாதே. பதிலைச் சொல்!" என்றார் செல்வம்.



மெமோரியல் உலகத்தின் பணியால் இழந்த நினைவுகளை மீட்க இது ஒரு முதல் படி என்று வசந்தனின் உள்மனது உந்தித் தள்ளியது.



"நான் ஏற்றுக்கொள்கிறேன் ஐயா!" என்றான்.



"நல்லது. இன்றிரவு நீ இங்கேயே தங்கவேண்டும். காலை வரை உனக்கு நேரம் இருக்கிறது" என்று ஒரு விஷமச் சிரிப்பை உதிர்த்தார். அதில் நாளை நீ கலங்கிய குரலோடு வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஓடப்போகிறாய் என்ற பொருள் ஒளிந்திருந்தது.



"உனக்கு ஒரே ஒரு உதவி செய்கிறேன். எக்காரணத்தைக் கொண்டும் உன் மனோதைரியத்தை விட்டுவிடாதே. விட்டு விட்டால், இதோ இங்கு உலவுகின்ற துஷ்டாத்மாக்களோடு நீயும் கலக்க வேண்டிவரும்" என்று கூறி மரக்கலத்தில் ஏறினார்.



ராஜீவ் தன் கட்டைவிரலை உயர்த்தி, ஜெயித்துவிடு என்று சமிக்ஞை செய்தான். மரக்கலம் நகர்ந்து சென்றது. அது செல்லச் செல்ல சிறியதாக மாறி கடலிலே கரைந்து போனது.



*** *** ***



இரவு நேரம்....



வசந்தன் கடற்கரையிலேயே இருந்தான். வென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தை அரித்தது. எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று துணிந்தான். கடற்கரையின் மணலில் அமர்ந்தபடி கடலையே வெறித்தான்.



அப்பொழுது அங்கு நடந்த காட்சி அவன் உடலையே உறையவைத்தது. ராட்சத அலையோடு மிரள வைத்த நீல நிறக் கடலின் நிறம் மாறியது. பொன்னிறமாக மாறி ஒரு விந்தையை உண்டு பண்ணியது. என்ன நடக்கிறது? என்று புதிரோடு விழித்தான் வசந்தன். பொன்னிறக் கடல் ஜகஜோதியாக மின்னி அவனுள் ஒரு பரவசத்தை உண்டு பண்ணியது. தன்னையறியாமல் எழுந்தான்; நடந்தான்.



மின்வெட்டும் நேரத்தில், ஏன் நாம் கடலைப் பார்த்தபடி செல்கிறோம் என்றெண்ணி அவசர அவசரமாகப் பின்னோக்கி நடந்தான். பொன்னிற அலைகள் அவனைப் பிடிக்கத் துரத்துவதைப்போல் கரையை நோக்கி ஓடி வந்தன. என்ன நடக்கிறது இங்கே? என்று எண்ணக்கூட மறந்துபோய் மிரண்டு போயிருந்தான் வசந்தன்.



குளிர் காற்று மெல்ல மெல்ல அங்கே வலம் வந்து கொடூர பனி மழையாகப் பொழியத்தொடங்கியது. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வசந்தனுக்கு ஏதுமில்லை. நிராயுதபாணியாக நின்றான். அவன் உடலில் வெள்ளை முத்துக்களாலான பனி மெல்ல மெல்ல விழுந்து ஒரு போர்வையாகப் படர்ந்தது.

குளிர் ஒரு பக்கம். மயக்கம் ஒரு பக்கம் என்று அவனைப் பல திசைகளில் இழுத்தன துன்பங்கள்.

கடற்கரை மணலில் விழுந்தான்.



கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்த குளிரை எதிர்த்துப் போராடாமல் அதை ரசிக்கத் துவங்கினான். அது எப்படி உடலில் பரவுகிறது? என்று ஆராயத் தொடங்கினான். இந்த வித்யாசமான சிந்தனை குளிர் என்ற அரக்கனிடம் இருந்து அவனைக் காக்கத் தொடங்கியது. குளிரை ரசித்துக்கொண்டிருந்த அவனை மயக்கம் அணைத்துக்கொண்டது.



பொன்னிறக் கடலின் அடியில் தீய ஆத்மாக்கள் கொடூர சத்தங்களை எழுப்பியபடி மேலே வரத் துவங்கின...



தேடல் தொடரும்...

மந்திர குவளை

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர்

நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.

பல நாட்கள் சென்றன.

மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவலை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன். "மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவலை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும்.

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறி மறைந்தது தேவதை.

வீண் பழியும் இலவம் பஞ்சும்

ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது.

பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
...
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.

வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.

உடனே துறவி, “வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.

வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.

“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.

துறவி சிரித்துவிட்டு, “வெட்டுபுலி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார்.

வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் வெட்டுபுலி.

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.

-- அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி
"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் "என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான். அவனைப் பார்த்து,அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.
"ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது.கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா."
அதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்த அந்த வழிப்போக்கன்,"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான். தன வழியே போகத் தொடங்கினான்.

அப்போது அந்தப் புலி," ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று." எனக் கெஞ்சியது.
தயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது.மன்றாடியது. "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.

என்ன நடக்கும்?வெளியே வந்த புலி "என்ன நண்பரே, நலமா?" என்றா விசாரிக்கும்?

ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.

"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல வருகிறாயே,"

"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது தெரியாதா உனக்கு?"

"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்."
என்றான் நடுங்கியவாறே.
அந்த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்
"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.
புலி "இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு
நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.

அருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.
"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு, "என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது?" என்று ஒன்றுமே புரியாதது போல் கேட்டது.

புலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி "ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா?" என்று வேண்டுமென்றே கூறியது.
புலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,
"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது." இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமஅய்யா, நிற்கிறீரே"என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.

அந்தநரி, "துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள் ஐயா"என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிட்டது.

உண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.
அறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.

நம் வாழ்க்கையிலும் நாம் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் நம்மை அணுகாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நாயின் வால்-அறிவுக்கதை
****************************************
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

துருக்கியில் நடந்த உண்மைச்சமபவம் இது,

வாசித்துப்பாருங்கள் கண்கள் கலங்குகின்றன! உண்மையான சகோதர பாசம் என்பது இதுதான்!!
இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்படவேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது.

மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி “உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா?” என்று கேட்டனர்.
சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான்.

சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனை தைரியமூட்டி கொண்டிருந்தனர் ,பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது.
சிறுவன் மருத்துவரை பார்த்து “டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?” என்று சோகமான குரலில் கேட்டான்.
சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே டாக்டர், ’ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை’ என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார்.

“சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான், தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான்.” யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.
அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும்,செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர்

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார்.

ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.

இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.

அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறாய்?" என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.

அதற்கு பீர்பால் "நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்" என்றார்.

அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌