This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, October 15, 2013

கடுகு கதை

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுக்கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.
சிறுவன் முகத்தில் வியப்பு.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா? ” இளைஞர் கேட்டார்.
சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்

தைரியசாலி

ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம்
ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது
செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!
ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல்
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..?
என்ன அசை போடுகிறாய் ...?
நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது
பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன்  என்று  உரத்த  தொனியில்  கூற
சிங்கம் ஓட்டம் பிடித்தது
தைரியம் இருந்தால் எந்த கஸ்ரத்திலும் ஒருவன் மீளுவான் கோழைதான் சாவான்

அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?

அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன ...!
அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் ..
அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் - என்றாள்...!
இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் ...!
மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை..
இது -பிள்ளைக்குத்தான் - ஆகும் என்றாள் ...!
அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை ...!
மாறு வேடத்தை கலைத்த ராஜா மூவரையும்
அழைத்து விளக்கம் கேட்டார் ...?
*
*
*
*
*
விடை :
முகத்துக்கு உதவும் என்றது :மஞ்சள் பயிரிட உதவும் ...
வாய்க்கு உதவும் என்றது :வெற்றிலை பயிரிட உதவும் ...
பிள்ளைக்கு உதவும் என்றது :தென்னம் பிள்ளை பயிரிட உதவும் ...
நன்றி : பேராசிரியர் .எ .சோதி (புதிர் கதைகள் )

எருமை மாட்டுக்கு மூளை ...?

ஒரு காட்டில் கிழட்டு சிங்கம்
வசித்து வந்தது அதனால்
போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது ...!
இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது...!
நரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது ...
தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் சென்று தன் தந்திரத்தை பயன்படுத்தியது
எருமை மாட்டை பார்த்து நரி கேட்டது ...
காட்டுக்கு யார் ..? ராஜா ...? என்று ..?
எருமை சொன்னது இது என்ன புதுக்கேள்வி ..?
சிங்கம் தானே என்றது ...
நரி சொன்னது ...
அது நேற்று வரை இன்றுமுதல் உன்னை தான் ராஜாவாக்க சிங்கம் நினைத்துள்ளது உன்னை அழைத்துவர சொல்லியே நான் வந்தேன் ..என்று தந்திரமாக எருமையை அழைத்து சென்றது
அங்கு சிங்கம் கடும் பசியுடனும் கோபத்துடனும்
காத்துக்கொண்டிருந்தது ..எருமை கிட்ட வரமுன்
அதன் மேல் பாய எருமை சற்று விலகி தப்பி ஓடியது ...அவசரப்பட்டதால் சிங்கத்துக்கு உணவு கிடைக்கவில்லை ....
சிங்கத்தை பார்த்து நரி பேசியது -உனக்கு ஒரு கூடாத பழக்கம் அவசரப்படுவது ..நான் கஸ்ரப்பட்டு கூட்டிக்கொண்டு வர நீ குழப்பி விட்டியே என்று திட்டியது ...!
சரி சரி போய் எருமையை கூட்டியா என்று கட்டளையிட நரி எருமையிடம் சென்று ...
ஏப்பா.... ஓடி வந்த ...? சிங்கம்... புதிய ராஜாவை கட்டிப்புடித்து முத்தமிட பாய்ந்ததை நீ கொல்லவருவதாக நினைத்து ஓடிவந்திட்டையே
பயப்பிடாமல் வா என்று மீண்டும் கூட்டிச்சென்றது
சிங்கம் இப்பொது கவனமாக எருமையைக் கொன்று சாப்பிட்டது ..சிங்கம் எருமையின் பெரிய காலை சாப்பிட்டு ...நரியை பார்த்து சொன்னது
நீயும் கொஞ்சம் சாப்பிடு ..என்று சொல்லிவிட்டு தூங்கியது .....!
நரிக்கோ மூளையென்றால் தான் விருப்பம் அது எருமையின் மூளையை சாப்பிட்டது ..
சிறிது நேரத்தில் சிங்கம் எழுந்து எருமையை சாப்பிட தொடங்கியது ..அப்போது நரியிடம் கேட்டது ..எருமையின் மூளையை காணவில்லையே எங்கே என்று ...?
நரி சொன்னது -எருமைமாட்டுக்கு மூளையிருந்தால் நான் கூப்பிட திருப்பி வந்திருக்குமா ...?...
*
*
*
*
*
*
மிருகங்கள் குண இயல்புகள் ...
சிங்கம் ; அவசரப்புத்தி
யானை ; பொறுமை
புலி ; குறி தப்பாது
நரி ;தந்திரம்
குரங்கு ;கொள்கை உடையது
..........இப்படி பல குணங்கள் கொண்ட மிருகத்தின்
கலவைதான் மனிதன் அதுதான் -கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான் மனிதனோ .....?

நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் ...!
புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார்
மிக நீண்ட தூர பயணம் .. இடம் நெருங்கி வந்த போது நியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார் பல்கலைக்கழகம் வந்தது ..
நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் ..
விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க ..நியூட்டன் மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ...
மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் ....
அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார் -
பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே ...

குட்டீஸ்களுக்கு ஒரு சிரிப்புக்கதை...!

ஒரு ஊரில் இரண்டு அண்டப்புளுகர்கள் இருந்தனர்
பொய் என்றால் பொய் அப்படி புழுகுவார்கள் ...
இருவரும் ஒரு மலையடிவாரத்தில் இருந்து கதைத்து கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான் இந்த மலையுச்சியில எறும்பு இரண்டு சண்டைபிடிக்குது உனக்கு தெரியுதா ..? என்று ...!
மற்றவன் சொன்னான் பாருங்க ஒரு விடை ...?
ஒரு எறும்புக்கு மூக்கால இரத்தம் வடியுது தெரியுதா உனக்கு ...என்றான் ..
அப்படி அண்டப்புளுகர்கள் இருவரும்
.....இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..இவர்களுக்கு ஒரு போட்டி வைத்து யார்
மகா புளுகர் என்று தீர்மானிப்போம் ..என்று ஊர் மக்கள் முடிவெடுத்தனர் ...
நாளை எங்கள் கோயில் கும்பாபிசேகம் ..அன்று கோபுர உச்சியில் இந்த கல்லை வைக்கப்போகிறோம்(கல்லை துணியொன்றால் மறைத்து கட்டியுள்ளனர் ) இதில் சில வாசகங்கள்
எழுதியிருக்கிறோம் அதை நீங்கள் யார் சரியாக வாசிக்கிரியலோ..அவர்தான் இந்த ஊரின் மகா புளுகர் என்று படம் பெறுவார் ...
மறுநாள் காலை இருவரும் அழைக்கப்பட்டார்கள்
கோபுர உச்சியை தூரத்திலிருந்து பார்க்கவைத்தனர் ...சரி சொல்லுங்கள்...என்ன
எழுதியுள்ளது ....?
ஒருவன் சொன்னான் -அன்பே சிவம் -என்று எதுதியிருக்கையா ...!
மற்றவன் சொன்னான் : அன்பேசிவம் என்று மட்டுமா எழுதியிருக்கு உபயம் -என்று நம்ம அய்யாவின் பெயரும் சிறிய எழுத்தில் இருக்கு என்றான் ...
ஊர் தலைவர் சொன்னார் மன்னிக்கவும்..
நாங்க அந்த கல்லை வைக்கவே இல்லை ..
அப்புறம் என்ன இருவருக்கும் தர்ம அடிதான் ...
ஹி......ஹி.....ஹி....ஹி....ஹி....

முட்டாளும் புத்திசாலியும்

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

எல்லாரும் சிவம் ++ஒட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி

கூவம் நதி ஓரத்தில்
ஒரு பிள்ளயார் கோவில்
அங்க ஒரு சாமியார் உட்காந்து இருந்தார்
வரகிற போகிற மக்களிடம்
"நான்தான் சிவம் "
"நான்தான் புத்தன்"
"நான்தான் சித்தன் "
சொல்லி கொண்டு இருந்தார்.
ஒரு நாள் இன்னொரு சாமியார்
அங்கு வந்தார்
"சாமி நான் சிவம் வந்து இருக்கேன் "
என்று முதல் சாமியாரிடம் சொல்ல
"நீ சிவனா நான்தான் சிவன் "
முதல் சாமியார் அடம் பிடிக்க
சண்டை நடக்க
ஜாலியாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த
சின்ன சிறுமி கேட்டாள்
" எதுக்காக சண்டை போடரிக?
எல்லாரும் சிவம் தான்...
தெரியுமா ?"
சாமியார்களுக்கு மண்டை வெந்தது.

தபால் பெட்டியின் கதை!

1500-ஆம் ஆண்டில் பதிய நாடுகளைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார் போர்த்துக்கீசிய மாலுமி பார்த்தலோமியே டயஸ். அவருடன் மேலும் சில மாலுமிகளும் கடற்பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த கப்பல் தென்னாப்பிரிக்காவில் புயலில் சிக்கியது. அப்போது மாலுமி டயஸ் மரணமடைந்தார். அவர் பயணம் செய்த கப்பல் தென்னாப்பிக்க கடற்கரைத் தீவு ஒன்றில் ஒதுங்கியது. உயிர் பிழைத்த மாலுமி ஒருவர், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு கடிதத்தில் எழுதி, அதைத் தன்னுடைய காலணிக்குள் போட்டு ஒரு மரத்தில் தொங்கவிட்டுச் சென்றார்.
பத்து மாதங்களுக்குப் பிறகு அந்தத் தீவுக்கு வந்த மற்றொரு போர்த்துக்கீசிய மாலுமியான ஜோஓடாநோவா என்பவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் காலணியைத் தற்செயலாகப் பார்த்தார். உள்ளே இருந்த கடிதத்தைக் கண்டு விவரம் தெரிந்து கொண்டார்.
அதிலிருந்து அந்தத் தீவுக்கு வருபவர்கள் அந்தக் காலணியையே கடிதங்கள் போடும் பெட்டியாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதுவே உலகின் முதல் தபால் பெட்டி.
தென் ஆப்ரிக்காவிலுள்ள மோசல் என்னுமிடத்தில் இன்றும் அந்த மரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த மரத்தில் காலணி வடிவ தபால் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
தபால் பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் வழக்கம் உலகில் முதன்முறையாக 1874-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டனில் தொடங்கியது.

sema comdey

நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!

நிஜமாவா, எப்படி?

அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...