This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, November 5, 2013

Mahatma gandhi

Mahatma Gandhi
Born on: October 02, 1869
Born at: Porbandar, New Delhi
Died on: January 30, 1948
Studies at: Samaldas College at Bhavnagar, Gujarat, University College London
Mohandas Karamchand Gandhi 2 October 1869 — 30 January 1948)
Mohandas karamchand gandhi was the famous leader of independence movement of india.
He was born on 2 october 1869 in porbandar. He was the son of Karamchand Ghandhi and Putlibai.
Gandhiji family
At the age of 13 Mahatma gandhi was got married with Kasturba. They had four sons. When Gandhi was of 18 years he left India and moved to London on september  1888 to become a barister.
At initial some days in London Gandhiji tried to adopt the lifestyles of the peoples in London by spending his time to learn english and french and voilin and dance classes. but later he realized that he was there only for studies so, he decided to leave all these things and to become a serious student and starts living simple lifestyles.
Gandhiji passed their exams sucessfully and retuned to India on june 10, 1891. For the next two years Gandhiji keep practicing in India.
After some years Gandhiji again moved to south Africa in order to gain more knowledge about law and order. This was South Africa which convert a shy and silent man to a potent and resilent leader. On one of his business trip somthing happened which was very strange for him. When one day Gadhiji was boarded the train at Pietermartizburg station, there the official told him not to travel in first class but he has neede to travel in the third class, But as Gandhiji had the ticket of first class so he refuse to travel on third class. On this reaction of Gandhiji one of a policeman came there and threw Gandhiji out of the Train along with his luggage. This type of discrimination made Gandhiji think of that wheather he had to go back to his home of fight against the discrimination scattered by Britist rulers for Indians. Then he decided to fight against the discrimination and for the rights of Indians in South Africa.
In 1906 Gandhiji again grown up with Satyagrah which means the “passive resistence”. But For Gandhiji Styagrah truly means for truth force.
Due to his civil disobedience campaign he got jailed. He again conclude  320 km march towards the  sea to collect the salt which was also called as Dandi march. On release from prison in 1931 he the round table conference in London and conferenced over the reformation of Indian contitution.. In 1946 He also discussed with Cabinet mission and which recommended the new indian constitutional structure. Unfortunately on 1947 after independence when he tried to stop the hindu muslim conflict he died shooted by a hindu fanatic named Nathuram Godse. The last word he said during his death was “Hey Ram”. This accident scattered a heavy sorrow and sadness for whole country and their peoples and we all had lost our great leader Mahatma Gandhi. Who was also now called with respect as “The father of the nation”

Shivram Hari Rajguru

Shivram Rajguru
Born on: 1908
Born at: Khed in Pune District
Died on: 23rd March 1931
Studies at: Kashi reading at the Lokmanya Tilak Library
The full name of Rajguru was Shivram Hari Rajguru. He was born on 1906 in a brahmin family at Pune. He was also known as Raghunath. He learn sanskrit at his very early age at Varanasi and mostly reads at Lokmanya Tilak Library. During his learning he came to contact with with revolutionaries and also joined the Hindustan Socialist Republican Army. After joining this army he bacame very close to Chandrashekhar Azad, Sardar Patel. Rajguru was also a very good shooter.
He also took part in revolutionaries actions. On October 30 1928 when Lala Lajpat Rai concluded a prtest against Simon Commission, created by Britishers under Sir John Simon.  The police also reacted against this and one of the policeman killed Lalaji and he died on 17 November 1928.
Then to take revenge of Lalaji, Bhagat singh, Sukhdev and Rajguru lead a mission for the death of that police officer and killed him on 17 December 1928. After that he left Bhagat singh and moved underground in Nagpur. There he met with Dr. K.B.Hedgewar and hide in a RSS worker house. After somedays he moved to Pune again. He got arrested on 30 september 1929 and a case was started by government against 16 persons including Rajguru. All were awarded as imprisonment on 7 October 1930 and also processions and representations were made for their deaths. Mahatama Gandhi and various other leaders tried to protect them but after lots of tried they failed and finally Rajguru was hanged in Lahore jail on 23 March 1931 along with his two mates and after that got burnt under the supervision of policemen. Sadly Rajguru was only of 23 years old when he died. The whole country got admired by the sacrifice of this young revolutionaries and the sacrifices of such a brave youngmen. We truly salutes our this brave freedom fighter who thought only for his country and left all about himself behind. He only lived for his country and finally accept the death happily during his fight against the British rulers.

இசை எனும் தவம்


ஒரு நவாபின் அரண்மனையில் பல இளம் பாடகர்கள் இருந்தனர்.அரசவைக்கு வந்த சிறந்த பாடகன் ஒருவன் தான் பட சில விதிகளைச் சொன்னான்.அவை கடுமையாயிருந்தன.
அதாவது அவன் பாடும்போது யாரும் தலையை அசைக்கக் கூடாது.அசைந்தால் அவர்களின் தலைதுண்டிக்கப் பட வேண்டும்.நவாபும் விதிமுறைகளுக்கு ஒத்துக் கொண்டு,இசையைக் கேட்க விரும்புபவர்கள் இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டால் வரலாம் என அறிவித்தான்.
பல ஆயிரம் பேர் அந்த பாடகனின் இசையைக் கேட்கக் கூடினர்.விதிகளை நிறைவேற்றும் பொருட்டு நவாப் உருவிய வாளுடன் வீரர்களை ஆங்காங்கு நிறுத்தினார்.ஆனால் தலையை அசைப்பவர்களை நிகழ்ச்சியின் இடையில் வெட்டிக்கொண்டு இருந்தால் ,பாடகனுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால்,தலை அசைப்பவர்களை அடையாளம் காணச் சொன்னான்.
இவ்வளவு கடுமையான ஏற்பாடுகளுக்குப் பின்னும் பத்து பேர் தலை அசைத்துவிட்டனர்.நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தலையை வெட்ட அரசன் ஏற்பாடு செய்தான்.அப்போது அந்த பாடகன் சொன்னான்,''இந்த பத்து பேர் மட்டுமே என் பாடலைக் கேட்கத் தகுதி உள்ளவர்கள்.மற்றவர்கள் மரணத்திற்குப் பயந்து என் பாடலைக் கவனிக்கவில்லை.அவர்கள் கவனம் அவர்களின் உயிர் மீதுதான்.
அவர்களுக்கு இசை தேவையில்லை.நான் பாடிய பாடல் இந்த பத்து பேருக்கு மட்டும் தான்.அவர்கள் என் பாடலின் இனிமையில் தம்மை மறந்து விட்டார்கள்.எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி பாடலின் இனிமை அவர்களது இதயங்களைத் தொட்டிருக்கிறது..மீதி இரவும் நான் அவர்களுக்காக பாடுவேன்.எனக்குப் பரிசு எதுவும் தேவையில்லை.இசையைக் கேட்கும் உண்மையான மனிதர்களைக் கண்டுபிடித்ததே சரியான பரிசு.
இவர்களுக்கு பரிசு கொடுக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.ஏனெனில் இசை என்பது ஒரு தவம் என உணர்ந்தவர்கள் இவர்கள்''அந்த பத்துப் பேரைப் பொருத்தமட்டில் இசையைக் கேட்கும்போது அவர்களே மறைந்து போய்விட்டார்கள்..இசைமட்டுமே அங்கு இருந்தது .

நற்பண்புக்கு கிடைத்த பரிசு(சிறுகதை)

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.
நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.
இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”
மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.
வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.
இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.
தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.
‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.
துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

புல்லுக்கு இறைத்த நீர்..!

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு.
சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.
'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.
'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.
வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது,
இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான்.
வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.
என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான்.
வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.
'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?
மேளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,
'என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.
'சும்மா.. லைபிரரிக்கு..!'
அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.
காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும்.
அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.
ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள்.
மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.
அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன்.
கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.
'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.
'ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.
கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.
என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.
'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.
'எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.
'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.
'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.
அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.

அர்த்தங்கள்


மீனா அபார்ட்மென்ட்ஸ். மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு. சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியினை காண கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது.
உடனே கணவனிடம் சென்று,
"இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க, சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க. அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம், வர ஒரு வாரம் ஆகும்னு
சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?"
"சரி சரி"
அழைப்பு மணி அழைத்தது.
கதவை திறந்ததும் மலர்ந்த முகத்தோடு அந்த வயோதிக உள்ளங்கள் வந்தது. உடனே அவன் தன்மனைவி சொன்ன வார்த்தை பிசகாமல் படபடப்போடு அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவர்களும் பாவமாய்
"சரிப்பா...பரவாயில்லப்பா, இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம்...இவ பேரன பாக்கனும்னா. நாங்க பார்த்துட்டு போயிடறோம்" என்றார்கள்.
குழந்தையை பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை அவர்களுக்கு.
குழந்தையோ அழுது கதறியது.
கொஞ்சிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.
கதவை தாளிட்டு வந்து "அப்பாடா...போக வச்சாச்சு" என்று கணவனும், மனைவியும் சந்தோஷப்பட்டார்கள்.
அவ்வளவு நேரம் அழுத அந்த எட்டு மாதக் குழந்தை அவர்கள் இருவரையும் பார்த்து 'கக்கக்கவென' சிரித்தது.சத்தமாய் அழது அரற்றிய குழந்தை திடீரென சிரிப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
"பாசமாய் வந்த அய்யா அப்பத்தாவை விரட்டி விட்டீர்களே.எத்தனை வருடம் உங்களுக்காக அவர்களை சிதைத்து
கொண்டு உங்களை இந்த உச்சியில் வைத்திருக்கிறார்கள்.அடுத்தவரோட
உணர்வுகளை உணர்ந்து, மதிச்சு நடக்கிறவன் தான் மனுஷ ஜென்மம். உங்களுக்கு போய் நான் பொறந்ததுல வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தான் என் அய்யா அப்பத்தாவோட நான் இருக்க முடியலயேன்னு அழுதேன். இப்படியும் அப்பா அம்மா இருக்காங்களேன்னு உங்கள பார்த்து சிரிக்கிறேன்" என்று அந்த குழந்தையின் சிரிப்பில் அர்த்தங்கள் இருப்பதாய் அவர்களுக்கு
உரைத்தது.

அம்மா .....

அம்மா .....
ஒரு கோழி தன் குஞ்சுகளை பொரிப்பதற்காக‌ ஜந்து முட்டை இட்டு அடைகாத்து வாழ்ந்து வந்தது...
அது அதன் குறிப்பிட்ட‌ காலத்தில் தன் குஞ்சுகளை பொரித்தது.... இந்த‌ ஜந்து குஞ்சுகளும்  ஒரே மாதியாக‌ இல்லை நான்கு அம்மாவைப் போலவும் ஒன்று எதற்கும் கிழ்படியாமலும் இருத்தது.......

நான்கும் அம்மாவின் சிறகுகளில் இருக்க ஒன்று மட்டும் தனியாக‌ இருத்தது ..
ஆனாலும் அம்மா அந்த‌ பிள்ளையை தேடிப் போய் ஒவ்வோரு முறையும் பாதுகாத்தது....


திடீர் என்று அவர்கள் வசிக்கும் அந்த‌ ஊரில் ஒரு எரிமலை ஒன்று வெடிக்க‌ போகிறது என்று ஊர் மக்கள் அந்த‌ இடத்தை விட்டு வெளியேறினார்கள் .. உடனே அந்த‌ தாய் கோழி தன் குஞ்சுகளை பாதுக்காப்பு மிக்க‌ இடத்திற்கு கொண்டு சென்றது நான்கும் பாதுக்காப்பு இடதிற்கு கொண்டு போக‌ தன் பெற்ற ஒன்றை மட்டும் விட்டு செல்ல மனம் இல்லை .. எவ்வளவோ எடுத்து சொல்ல‌ அது தன் அம்மாவின் பேச்சை மறுத்து சுற்றிக்கொண்டு இருத்தது........

உடனே அம்மா தன் நான்கு குஞ்சுகளை பர்த்து நீங்கள் வளர்த்து விட்டீர்கள் தங்களை தாங்கள் இனி உங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் ...
நான் அந்த‌ குழந்தைக்கு வாழ்க்கையின் நிஜத்தை புரிய‌ வைக்க‌ போகிறேன் என்று சொல்லி விடை பெற்றது... அவமானம் படுத்திக் கொண்டே இருத்த‌ தன் குழந்தையை  இழுத்து தன் சிறகுகளால் முடிக்கொண்டது ... எரிமலை வெடித்து எல்லோரும் இறக்க‌ ...

இந்த தாய் கோழியும் இறத்து போனது.. அதன் கூடுகளின் அடியில் தன் குஞ்சு குழந்தை உயிரோடு  இருத்தது ... தன் அம்மாவின் பினத்தை பார்த்த பிறகு தான் செய்த‌ தவறை எண்ணி வருத்தியது ...

நீதி:  இந்த‌ உலகத்தில் தன்னை கொடுத்து நாமக்காக வாழும் ஜிவன் அம்மா .. என்பதை உணராமால் இருக்க‌ கூடாது ... யாரகிலும் ஒருவர் நமக்கு அறிவரை சொன்னால் கண்டிப்பாக‌ கேட்க முயற்சி செய்ய‌ வேண்டும்.. இருக்கும் பொழுது பாதுக்காக்காத‌ எதுவும் இல்லாத‌ பொழுது வருத்தங்களைத் தரும் .. பொருளாக‌ இருத்தாலும் சரி உயிராக‌ இருத்தாலும் சரி...

வேலை


சுமதிக்கு சங்கீதம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வெகுநாளாய் ஆசை. சங்கீத மேதை சரஸ்வதியம்மாள் அவர்களை சந்தித்து எப்படியாவது கேட்டு விட வேண்டுமென்று சென்றாள்.
வாயில்கதவு முதல் ஒவ்வொரு புறமும் இசைகருவிகளின் வடிவம் போல
அமைக்கப்பட்ட சங்கீத வீடு.
உள்ளே செல்ல அனுமதி கிடைத்ததும் வரவேற்பரையில் அமர்ந்தாள்.
"ஹை...ஐ யாம் ஷிவா, சரஸ்வதி அம்மாளின் ஒரே பிள்ளை" -- அறிமுகம் செய்து கொண்டான்.
"என்னை உங்களுக்கு..." என்று இழுத்தாள் சுமதி.
"என்ன இப்படி கேட்டுட்டீங்க,உங்க வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுல இருக்கிற செல்வா என்னோட நண்பன்.அவன் வீட்டுக்கு வந்த போதெல்லாம் உங்க பாட்டு கேட்கும். ரொம்ப ஸ்வீட் வாய்சுங்க உங்களுக்கு.அருமையா பாடறீங்க" அருவியாய் பொழிந்தான்.
"என்னை ரொம்ப புகழ்றீங்க.
நான் இங்க வந்ததே உங்க அம்மாகிட்ட சங்கீதம் கத்துக்கலான்னு கேட்கத்தான்" என்று சொல்லி கொண்டிருந்தபோதே சரஸ்வதியம்மாள் மாடியிலிருந்து கீழே வர...
"வணக்கம்மா"
"யாரும்மா நீ?"
"என் பேரு சுமதி. உங்ககிட்ட சங்கீதம் கத்துக்கணும்னு ஆசை. அதான் கேட்க வந்தேன்"
"நான் இப்ப யாருக்கும் சங்கீதம் கத்துத்தர்றதில்லையே"
"இல்லம்மா, எனக்காக நீங்க கொஞ்சம் மனசு வைக்கணும்"
"நீ என்ன ஜாதி"
"எதுக்கும்மா"
"கண்டவங்களுக்கெல்லாம் நான் கதுதரமாட்டேன்"
"இசையில பெயரும்,புகழும் உள்ள நீங்கல்லாம் ஜாதி பார்த்து பிரிக்க கூடாதும்மா. நிச்சியம் உங்க பேரக் காப்பதுற மாதிரி நான் வருவேன். ஜாதி பார்த்து பாகுபாடு காட்டறது நியாயமில்லம்மா"
"என்ன மிரட்டுறியா?"
"இல்லம்மா...வேண்டுகோள்"
"உனக்கு சங்கீதத்த பத்தி என்ன தெரியும்?"
"ஓரளவு தெரியும்.நிறைய ஆசையும் அக்கறையும் இருக்கு"
"நான் நினைச்சது எனக்கு கிடைச்சிரிச்சு. இனிமே ஓய்வெடுக்கத்தான் இங்கு செட்டில் ஆனேன்.அதனால நீ போகலாம்."
"அம்மா அப்படிச் சொல்லாதீங்க. இது என்னோட ரொம்ப நாள் தாகம். நெஞ்சுக்குள்ள இருக்கிற வெறி. நீங்க கத்துதரலேன்னா நான் போக மாட்டேன். உங்க வீட்ல ஏதாவது வேலை கொடுங்க அப்படியாவது உங்க சங்கீதத்தை கேட்கிற பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும்"
"ஆக...நீ போறதா இல்லை?"
"ஆமாம்மா"
"சரி...நீ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறதால உனக்கு ஒரு வேலை தர்றேன், செய்யிறியா?"
"செய்யிறேன்...என்ன வேலம்மா?"
"ம்ம் ....என் பையனுக்கு மனைவிங்கிற வேலை, எனக்கு மருமகள்ங்கிற வேலை,செய்யிறியா?"
சுமதிக்கு பேச்சே வரவில்லை திகைப்பில்.
"எனக்குத் தெரியும்மா, என் பையன் செல்வா வீட்டுக்கு போயிட்டு
வந்தப்பெல்லாம், அம்மாஒருபொண்ணு அருமையா பாடுறான்னு உன்னை பத்தியே
புலம்ப ஆரம்பிச்சான். ஆயாம்மா வந்து நீ எங்கிருந்து வந்திரிக்கேன்னு சொன்னதுமே நான் புரிஞ்சிக்கிட்டேன். சும்மா விளையாட்டா சில கேள்விகள் கேட்டேன். என்ன உனக்கு சம்மதமா?"
சுமதி வெட்கத்தில் தலையசைத்தாள்.
பெற்றவர்களின் ஆசியோடு ஒரு நன்னாளில் சுமதி-ஷிவா கல்யாணம் விமரிசையாய் நடந்தது.

கிளிப்பேச்சு


நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள்
அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல் இன்னும் ஒரு மாதத்தில்
நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை
ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென
ஒரு வளைவில் வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து அடிபட்டு விழுந்தாள். கூட்டம் கூடியது.
பிறகு...
சோலை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு. டாக்டர்கள், நர்சுகள் என துரிதமாய் செயல்பட
அவளுடைய முகவரியறிந்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட இரு வீட்டாரும் வந்து அழுகையும், பயமுமாய் தவித்து கொண்டிருந்தனர்.
சாயங்காலம் டாக்டர் அழைத்தார்.
"பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல.ஆனா இரும்பு கம்பில மோதி பலமா அடிபட்டதால இனி பேசுரதுங்கிறது
கொஞ்சம் கஷ்டம். ஆனா பேச்சே வராதுங்கிறது இல்ல. பேசி பேசி பழகனும்" என்றார். நிச்சயம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்தாகி விட்டது.
இரண்டு வாரங்களுக்கு பின் ஹனு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று ஊஞ்சல் நாற்காலியில் ஆடியபடியே பழைய நினைவுகள், கல்யாணம், விபத்து என்று சோகமாய் இருந்தாள்.
அப்போது "ஹனு...ஹனு..." என்று கூண்டுக்கிளி அழைத்தது.
அவள் அதை பார்த்தாள். தான் இருக்கும் நிலையை போல, சொல்ல முடியாத சோகங்களோடு தானே அந்தக் கிளியும் இருக்கும் என்று நினைத்தாள். அதை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாய் அது பறந்து திரியட்டும் என எழுந்து சென்று கூண்டை திறந்து விட்டாள். கிளி வெளியே போக மறுத்தது.
ஹனுவை பார்த்து "அம்மா...அம்மா..." என்றது... பிறகு" அப்பா...அப்பா.." என்று சொன்னது.
அவை,அந்த வார்த்தைகள் ஆசையோடு அந்த கிளியை வாங்கி வந்து ஹனு சொல்லி கொடுத்த வார்த்தைகள்.
கிளி மீண்டும் "அம்மா...அம்மா.." என்றது.
ஹனு கண்களில் நீர் திரள "அ....அம்....மா..." என்று பேச பழகினாள்.

நிறம்


அண்ணா பூங்காவிற்குள் நுழைந்ததுமே புவனாவின் கண்களில் அவர் பட்டு விட்டதால் அவளுக்கு கோபம் தலைக்கேறியது...
நேராய் அவரிடம் சென்று... "நீங்கல்லாம் என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல?. நீங்க பொண்ணு பார்க்க வர்றீங்கன்னு நாங்க அலங்காரம் பண்ணிட்டு
இருப்போம். நீங்க வந்து பார்த்துட்டு, நல்லா சாப்பிட்டுட்டு ,பொண்ணே பிடிக்கலன்னு
சொல்லிட்டு போயிடுவிங்க. உங்களுக்கெல்லாம் மனசுல மன்மதன்னு நினைப்பா?" என்று மூச்சிரைக்க முடித்தாள் புவனா.
அவர் நிதானமாய் தொடங்கினார் ."இப்ப நான் பேசலாமா ? மேடம் நேற்று உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்கத்தான் வர்றேன்னு எனக்கு தெரியாது வீட்டுல கிளம்பசொன்னங்கன்னு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. நான் கல்யாணம் பண்ணிகிட்டா கறுப்பான ஒரு பொண்ண தான் கல்யாணம்
பண்ணிக்கனும்னு இருக்கேன். ஏன்னா கறுப்பான பெண்கள் எப்படில்லாம் நிராகரிக்க படறாங்கன்னு எனக்கு தெரியும் . நீங்க அழகா இருக்கீங்க, உங்களுக்கு என்ன விட நல்லா மாப்பிள்ளை, நீங்க சொன்ன மாதிரி மன்மதன் கிடைப்பான். அதனால தான் பிடிக்கலன்னு சொன்னேன். இத உங்க கிட்ட சொல்ல நினைச்சேன் . உங்க அப்பா பேச ஒத்துக்கல ,அதான் வேண்டான்னு சொல்லிட்டேன் " என்று நிறுத்தி நிதானமாய் முடித்தார்.
தன் அவசரத்தனத்தை உணர்ந்து தலை குனிந்தாள் புவனா
" சாரி சார் ,என்ன மன்னிச்சிடுங்க .உங்க மனசு தெரியாம கோபப்பட்டுட்டேன்.இப்ப உங்கள நினைச்சு ரொம்ப சந்தோஷப்படறேன். உங்க கல்யாணத்துக்கு என்னை கட்டாயம்
நீங்க கூப்பிடனும்" என்று கண்களை துடைத்து வெளியேறினாள்.