This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, December 14, 2013

ஒரு கண் போதும்.-

* துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது.
ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும்.
- சீன‌ப் ப‌ழ‌மொழி.
*****************
இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.
- கொரியா.
*****************
வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.-
டச்சுப் பழமொழி.
******************
தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.
-பிரான்ஸ்.
******************
மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும்.
-இங்கிலாந்து.
*****************
மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும்.
-இங்கிலாந்து.
*****************
கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி. -
ஜெர்மன்.
**************
அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.
- ஜெர்மனி.
**************
பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.
-இத்தாலி.
************
ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில்
அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் -யூகோஸ்லோவியா.

விவேகானந்தர்.

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.
*******************************

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
***
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
***
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
***
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ்
*************************
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
***
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
***
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
***
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
**************
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
***
எல்லாம் சில காலமே
- ரமண மகரிஷி
*****************
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
***
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
***
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
***
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
***
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது.
- பாரதியார்
*****************
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
***
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
***
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.ஆனால்,
அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.
***
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
********************
இதை மெதுவாகப் படியுங்கள்:
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
*
LIFE IS NO WHERE என்றா?
*
LIFE IS NOW HERE என்றா?
*
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
***
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
*
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!

நான் என்னை உருக்க தயார்

பணம் செலவழித்தால் சேமிப்பு
குறையும் -மனம் செலவழித்தால்
காதல் அழகு பெறும் ...!!!
************************
நீ என்னை காதலிப்பாய் என்றால்
நான் என்னை உருக்க தயார்
ஆனால் உருக்கி விடாதே ...!!!
*************
தனிமையை துரத்தி
இனிமையை தந்து
வாழ்க்கையை தந்தாய்
*******************
நீ மகுடியாக இரு
நான் பாம்பாக இருக்கிறேன்
காதல் ஓசையாக இருக்கட்டும்
*****************
நீ அழகான பூ
நான் மகரந்தம்
காதல் தேன் குருவி

காதல் ஒரு மாதுவால் வரும் மது

இதயத்தில் வருவது முக்கியம் இல்லை ..
நிலையாக இருக்க கற்றுக்கொள் ...!!!
************************
காதல் ஒரு மாதுவால் வரும் மது
அதிகம் பருகாதீர் ...
என்னைப்போல் பிசத்தாதீர் ....!!!
************************
என்னை சுற்றி அடைக்க பட்ட...
முள் வேலி நீ ...!!!
****************************
காதல்; பூவா முள்ளா ..?
அவர் அவர் நடத்தையில்
தான் காதல் உண்டு ....!!!
*****************************
நான் தவளை ...நீ கிணறு ....
காதல் தத்தளிக்கிறது ...!!!

உன் பார்வையால் காதலில் விழுந்தேன் ...

உன் பார்வையால் காதலில் விழுந்தேன் ...
காதல் காயத்தில் தவிக்கிறேன் ...!!!
**************************
உன்னை அடையாளம் கண்டேன் ...
என் அடையாளத்தை தேடுகிறேன் ..!!!
***************************
காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இரவில் சூரியன் தெரியும் ..!!!
***************************
காதலரின் பயிற்சி கூடம்
முக கண்ணாடி
**************************
காதலில் சொதப்பாதவர்கள் இன்பம்
காண்பதில்லை ....!!!
சொதப்பாமல் காதல் வென்றதில்லை ...

காதலும் காற்றும் ஒன்றுதான் இரண்டும் உயிர்

காதலும் காற்றும் ஒன்றுதான் இரண்டும் உயிர்
**************************
நீ அங்கு வரும் போது இங்கு இதயம் பறக்கிறது
**************************
இதயம் என்னை மறந்து விட்டது உன்னை மறக்காமல் இருக்கிறது
*************************
காதல் துரோகம் செய்யாது காதலர்களே
*************************
காதலில் கண்கண்ட கடவுள் காதலே

காதலில் சிக்கியது நீ தவிர்ப்பத்து நான்

காதலில் சிக்கியது நீ தவிர்ப்பத்து நான்
***********************
மேக அழகி மண்ணை பார்த்து கண்ணடித்ததே மின்னல்
**********************
மின்னல் நீ சிரித்த சிரிப்பு மழை நான் அழுத்த கண்ணீர்
*********************
நீ வாழ்வதற்காக நான் வாழ்க்கையை இழக்கிறேன்
********************
கனவிலும் துன்பம் தருவது காதல் தான்

ஒரே நாளில் பிணவரைக்கு

ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள்
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்க ு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.
அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்ட ிருக்கு"
முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.
"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.
அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.
மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.

பயம்! பயம்! பயம்!

பயம்! பயம்! பயம்!
--------------------------
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார்.
என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான்.
உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.
உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

நாற்றம்

நாற்றம்
*************
முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.
உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.
முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.
மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.'
'அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?
நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.
அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக்
கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''