கடவுளுக்கு சோதனை? கடந்த இரண்டு,மூன்று ஆண்டுகளாக உலக அளவில் மிகவும் சோர்வும்,சஞ்சலமும் அடைந்து இருக்கும் மனிதம்.ஒரு புறம் நோய்,மறுபுறம் போர்,இவற்றுக்கு இடையில் மனிதர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுதில் தான் எனக்கு இந்த உலகில் உள்ள மூன்று மிக பெரிய மதத்தை சார்ந்த கடவுளிடம் பேசும் அனுமதி கிடைத்தது அவர்களுடைய உரையாடலில் ஏன் உங்கள் மீது நம்பிக்கை சார்ந்த மனிதர்கள் அழிந்து கொண்டு இருக்கும் தருவாயில் அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை என்ற கேள்வி.ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் நாங்கள் எப்போது காப்பாற்றுவதாக நம்பிக்கை அளித்தோம் என்று பதில் வந்தது. இதில் இருக்கும் அர்த்தம் புரியும் என்றால் இந்த நூற்றாண்டு கடவுள்களுக்கு சோதனை ஆண்டு தானே.ஆனால் நாம் கோவில்களில் திருவிழாக்களையும்,மசூதிகளில் தொழுகையும்,சர்ச்களில் பிரார்த்தனைகளையும் நம்பிக்கையோடு நடத்தி கொண்டு இருப்பது தான் ஆச்சரியம்.
Friday, April 29, 2022
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment