Tuesday, October 29, 2013

சினிமாவால் சிரழிந்த சின்னவன்……..

சினிமா கனவு உலகத்தையும் சில பயங்கரத்தையும் காட்டும் உண்மையை எப்பொழுதும் அது காட்டியதே இல்லை
பணக்காரனை( தயாரிப்பாளர் ) ஏழை ஆக்கும், ஏழையை ( தொழிலாளியை ) பணக்கரனக்கும் . மாய வலை வீசி மயக்கும்.
அவன் ஓரளவு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் அவனுடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் இவன்தான் கடை குட்டி
அதனால், செல்லம் கூட தீவிர சினிமா பார்க்கும் பழக்கம் உடையவன் ஒரு நடிகரின் தீவிர ரசிகனும் கூட
அவனது தலைவன் படம் வந்து விட்டால் கொண்டாட்டம்தான்.
பியரும் பால் அபிஷேகம் எப்பொழுதும் உண்டு ஒவ்வொரு புது படத்தின் ரீலிஸ் பொழுதும் இந்த நிகழ்வு நடக்கும்
அவன் பார்ப்பதற்கு அட்டை கருப்பாகவும் இல்லமால் லைட் கலர் சட்டை போல் பளிச்சென்று இருப்பான்.
அவனுடை நண்பர் வட்டம் பெரியது.அவர்களையெல்லாம் அடிக்கடி சந்திப்பான் அப்பொழுது அவனது தலைவனின்,
பட வசனம் அந்நடிகரின் குரலில் அச்சு பிசரமால் பேசி நடித்து காண்பிப்பான்.அதில் மெய் மறந்த நண்பர் கள்
" நீ அப்படியே தலைவனை போலவே நடிக்கிறாய் பேசுகிறாய் கம்முனு நீ நடிகனாயீடு "என்றான் ஒரு நண்பன்.
அடுத்த தலைவன் நீதாண்டா என்று இன்னொருவன் சின்னத்திரையில்மிமிக்கிரி ஷோவ்க்கு போடா முன்னுக்கு வந்தரலாம்
" நம்ம விஜய் டிவி சிவா கார்த்திகேயேன் கூட அப்படிதான் இப்ப பாத்தியில்ல எப்புடி?என்றான் இன்னொருவன்.
ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்ல உசுபேற்றி உசுபேற்றியே கனவு உலகத்தை அவனுள் கொண்டு வந்து விட்டனர் மச்சிகள்
அவன் இதை பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அவனது மனம் ,
படத்தின் ரீலை போல் ஓடி கொண்டே இருந்தது விடிந்தும் விட்டது வாழ்வின் விடியலை தேடி சினிமா கனவு மூட்டைகளை ,
சுமந்து கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல் பேருந்து ஏறி விட்டான்.சில வருடங்களின் மாறுதலில்
சகோதரர்களுக்கு எல்லோருக்கும் திருமணம் ஆக ஆரம்பித்து விட்டது திருமணம் ஆகும் வரைதான் எல்லாம்,சகோதரர்களுக்கு திருமணம் ஆக ஆக அவனின் குடும்ப பொருளாதாரமும் குறைய ஆரம்பித்தது. அவரவர் குடும்பங்களை அழைத்து கொண்டு எல்லோரும் ( சகோதரர்கள்) தனி தனியாக வெளியூர் செல்ல ஆரம்பித்து விட்டனர் மேலும் அவனது தந்தை செய்து வந்த தொழிலும் கவனிப்பின்றி நட்டத்தையே கொடுத்தது.அவனை பெற்றவர்களும் முதுமையின் வாசலில் முனகி கொண்டு இருந்தனர்.இவனை நினைத்து
கனவில் ஏற்றி விட்டவர்கள் யாரும் கடைசி வரை இறக்கி விடுவதே இல்லை அது சினிமா உலகம் பார்த்து கொள்ளும் ..........

0 comments: