Wednesday, October 30, 2013

சான்டாவும் பான்டாவும்

ஒரு முறை சான்டாவும் பான்டாவும் பூர்வா எக்ஸ்பிரெஸ் ரயிலில் டெல்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்தனர். சான்டாவிற்கு மிடில் பெர்த்தும், பான்டாவிற்கு மேல் பெர்த்தும் பதிவு ஆகியிருந்தது. அஹமதாபாத் ஜங்ஷனில் சான்டா தேனீர் அருந்த இறங்கினார். பக்கத்து நடை மேடையில் கொல்கத்தாவில் இருந்து டெல்லி செல்லும் மற்றொரு பூர்வா எக்ஸ்பிரெஸ் நின்றுகொண்டிருந்தது. தவறுதலாக சான்டா அந்த ரயிலில் ஏறிவிட்டார். நடு பெர்த்திற்கு பான்டா மாறிவிட்டார் என்று கண்டு காலியாக இருந்த மேல் பெர்த்தில் சான்டா சென்று படுத்துக்கொண்டார். மறுநாள் மீண்டும் டெல்லிக்கு வந்துவிட்ட சான்டா, பான்டா மட்டும் கொல்கத்தா சென்றுவிட்டதை தெரிந்து அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை, "இந்தியா இத்தனை முன்னேறிவிட்டதா? நடு பெர்த் கொல்கத்தா செல்கிறது, மேல் பெர்த் டெல்லி செல்கிறது!!!!"
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍====================================================

சான்டா பான்டா மற்றும் ரெண்டு நண்பர்கள் நியூயார்க் சென்றபோது 85 மாடி கட்டிடத்தில் தங்கினர்.இவர்கள் அறை 74ஆவது மாடியில் இருந்தது. துரதிருஷ்டவசமாக இவர்கள் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது லிஃப்ட் ரிப்பேர் ஆகிவிட்டது.அவரவர் வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள் பற்றி பேசிக் கொண்டே படியேற ஆரம்பித்தார்கள். மூவர் கதைகள் முடிந்த போது 74ஆம் மாடி வந்து விட்டது. இப்போது சான்டாவின் முறை, "நம்ப அறை சாவியை கீழேயே விட்டுட்டு வந்துட்டேன்.....

0 comments: