Wednesday, October 30, 2013

"கடவுள் எங்கே?"

ஒரு தம்பதிக்கு 8, 10 வயதில் குறும்புக்கார மகன்கள் இருவர் இருந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த பெற்றோர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. ஊருக்கு புதிதாக வந்த ஒரு சாமியார் மகன்களை திருத்தமுடியும் என்று கேள்விப்பட்டு, முதலில் இளையவனை அவரிடம் அழைத்துச் சென்றனர்.

தனியே விடப்பட்ட சிறுவனிடம் சாமியார் மெதுவாக, "கடவுள் எங்கே?" என்று கேட்டார். சிறுவன் முகத்தில் சிறிது பயம் கலந்த அதிர்ச்சி. பதில் இல்லை.

புரியவில்லையோ என்று நினைத்து அதே கேள்வியை இன்னும் சற்று அழுத்தமாக கேட்டார். சிறுவன் முகத்து அதிர்ச்சி அதிகமானது. இன்னும் அதிக‌ பலமாக மூன்றாம் முறை வந்த கேள்வியில் துள்ளி குதித்த சிறுவன், வேகமாக ஓடி தங்கள் வீட்டு அலமாரியில் ஒளிந்துகொண்டான். "என்னாச்சு?" என்ற சகோதரனிடம் கவலையாக சொன்னான், "ரெண்டு பேரும் நல்லா மாட்டிக்கிட்டோம். இப்ப கடவுளை காணோமாம், பழி நம்ம மேல விழுந்திடுச்சு

0 comments: